ஒரு ‘வாரத்துக்கு’ தேவையான அத்தியாவசிய பொருட்களை இருப்பு வச்சிக்கோங்க.. பேரிடர் மேலாண்மை ‘முக்கிய’ அறிவிப்பு..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் பருவமழை தீவிரமாக பெய்து வருவதால் ஒரு வாரத்துக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை இருப்பு வைத்துக்கொள்ள தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் மழைக்காலங்களில் பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதில், மழை பெய்து வருவதால் இடி மின்னல்கள் அடிக்கடி ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. அதனால் பொதுமக்கள் குடைகளை உபயோகப்படுத்தக் கூடாது, மரத்தின் அடியில் நிற்க கூடாது, திறந்தவெளியில் இருக்கக் கூடாது, நீர்நிலைகளில் குளிக்க கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நீர்வரத்து அதிகரித்து வருவதால் கடல், ஆறு, ஏரி, குளம் மற்றும் குட்டை போன்ற நீர் நிலைகளில் குளிக்கவோ கடந்து செல்லவோ வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருதால் பொதுமக்கள் பழைய கட்டிடங்களில் தங்குவதோ, அருகில் செல்லவோ வேண்டாம். அவ்வாறு பழைய கட்டடங்களில் தங்கி இருப்பவர்கள் உடனடியாக வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் மெழுகுவர்த்திகள், தீப்பெட்டிகள், எரிவாயு, மண்ணெண்ணெய், மருந்து, பேட்டரிகள், டார்ச்கள், முகக்கவசங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை ஒரு வாரத்திற்கு இருப்பு வைத்துக்கொள்ள தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'தொடரும் கனமழை'... 'வாட்சப்ஆப்பில் பரவிய தகவல்'... 'செம்பரம்பாக்கம் ஏரியின் நிலை என்ன'?... மாநகராட்சி விளக்கம்!
- '12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு'... 'மேலும் இந்த 4 மாவட்டங்களில்'... 'சென்னை வானிலை ஆய்வு மையத்தின் புதிய அறிவிப்பு!!!'...
- இன்னும் எத்தனை ‘நாளைக்கு’ மழை இருக்கு..? சென்னை வானிலை ஆய்வு மையம் ‘முக்கிய’ தகவல்..!
- ‘தீபாவளிக்கு தடையை மீறி’... ‘பொதுமக்கள் செய்த காரியம்’... ‘மோசமடைந்த நகரங்கள்’... ‘செய்வதறியாது தவிக்கும் மாநில அரசு’...!!!
- ‘நேரலையில் பேசிக் கொண்டிருந்த செய்தி ரிப்போர்ட்டர் .. சற்றும் எதிர்பாராத நேரம் திடீரென நடந்த பயங்கர சம்பவம்!’.. ‘வீடியோ!’
- ‘திடீரென ஆம்னி பேருந்துக்கு நேர்ந்த கதி’.. சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நடந்த பரபரப்பு சம்பவம்!
- ‘தீபாவளி தினத்தில்’... ‘வீடு முன் திரண்ட ரசிகர்கள்’... ‘தனக்கே உரிய பாணியில்'... 'நடிகர் ரஜினிகாந்தின் வாழ்த்து’... ‘உற்சாகம் ஆன ரசிகர்கள்’...!!!
- 'சென்னையில் வெளுத்து வாங்கும் மழை'... ஏரிகள் குறித்து மத்திய நீர் ஆணையம் எச்சரிக்கை!
- ‘இவங்களுக்கு மட்டும்’... ‘டிசம்பர் 2-ம் தேதி முதல் வகுப்புகள் ஆரம்பம்’... ‘தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு’...!!!
- Breaking: நவம்பர் 16-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுகிறதா...? - தமிழக அரசு புதிய உத்தரவு...!