'முகக்கவசம் ஒண்ணும் நமக்கு தேவையில்லங்க' ... 'இன்னும் ஒரு 15 நாள் மட்டும் இத பண்ணா போதும்' ... தமிழகத்தின் தற்போதைய நிலவரம்
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்திலுள்ளவர்கள் கொரோனா வைரஸ் அச்சறுத்தலுக்காக முகமூடி அணிய வேண்டிய தேவையில்லை என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தலின் பெயரில் சென்னை விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் மத்திய அரசின் கண்காணிப்பு அதிகாரி திருப்புகழ் ஆகியோர் ஆய்வு செய்தனர். அப்போது பேசிய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், 'சீனா, பிரான்ஸ், இந்தோனேஷியா, தென்கொரியா போன்ற நாடுகளில் இருந்து வரும் பயணிகள் விமான நிலையங்களில் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். ஒரு நாளுக்கு 100 ரத்த மாதிரிகளை தமிழகத்தில் சோதனை செய்யலாம்' என்றார்.
இது குறித்து விஜயபாஸ்கர் மேலும் கூறுகையில், 'கொரோனா வைரஸ் அச்சுறுத்தலின் பெயரில் தமிழக மக்கள் முகமூடி அணிய வேண்டிய அவசியம் இல்லை. கொரோனாவால் பாதிக்கப்பட்ட காஞ்சிபுரத்தை சேர்ந்த நபர் தற்போது குணமடைந்துள்ள நிலையில் இன்னும் ஒரு சில நாட்களில் வீடு திரும்பவுள்ளார். தற்போதைய நிலவரப்படி தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதித்த நபர்கள் யாரும் இல்லை என்பதை நான் தெளிவாக தெரிவித்துக் கொள்கிறேன். அடுத்த 15 நாட்கள் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ள நடவடிக்கைகளுக்கு தமிழக மக்கள் ஒத்துழைப்பு அளித்தால் கொரோனா வைரஸ் இல்லாத நிலையை தமிழகத்தில் உருவாக்க முடியும்' என நம்பிக்கையுயுடன் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘கொரோனா பரவிட்டு இருக்கு’... ‘ஆனா, சென்னைவாசிகள் ஏன் இப்டி இருக்காங்க?’... 'தமிழக வீரர் அஸ்வின் வேதனை'!
- ‘கொரோனா’ பாதித்த ‘இளைஞர்’... மால், சினிமா, நிச்சயதார்த்தம் என ‘வெளியே’ சென்றிருந்ததால் ‘பரபரப்பு’... அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்...
- 'எல்.கே.ஜி' முதல் 'ஐந்தாம்' வகுப்பு வரை ஸ்கூல் லீவ் .. 'வெளி மாநிலங்களுக்கு போகாதீங்க' ... தமிழக முதல்வர் வெளியிட்ட அறிக்கை
- தந்தையின் இறுதிச்சடங்கை 'வீடியோ கால்' மூலமாக பார்த்த மகன்!... பூத உடலை ஜன்னல் வழியாக பார்த்து கதறிய சோகம்!.... கல் நெஞ்சையும் கரையவைக்கும் மகனின் பாசப் போராட்டம்!
- 'வாட்டர் பெல்' அடித்த உடனே மாணவர்களை சோப்பு போட்டு கைக்கழுவ சொல்ல வேண்டும்...! 'நோட்டிஸ் போர்டுல ஃபர்ஸ்ட் எல்லாமே போட்ருக்கணும்...' பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு...!
- 'அறிவித்தது அறிவித்தது தான்'.... பள்ளிக்குழந்தைகள் 'விடுமுறை' குறித்து 'முதலமைச்சர்' வெளியிட்ட புதிய 'அப்டேட்'....
- 'ஊழியருக்கு கொரோனா இருக்குமோனு'... 'சந்தேகமா இருக்குறதுனால’... ‘பெங்களூரில் அலுவலகத்தை’... ‘காலி செய்த இன்ஃபோசிஸ் நிறுவனம்’!
- ‘கொரோனாவால் 41 பேர் பலி’... 'அமெரிக்காவில் அவசரநிலை பிரகடனம்’... 'இந்தியாவில் இருந்து செல்வதற்கான விசா வழங்குவது நிறுத்தம்’???
- ‘கொரோனா வைரஸ் இந்தியாவில் இரண்டாவது உயிரை பறித்தது...’ கொரோனா பாதிப்பால் உயிரிழந்தது உறுதியானது...!
- ஒண்ணும் ஆகாது, தைரியமா இருங்க .... 'பீதி'யில் உறைந்து போன மக்களுக்கு .... தைரியம் தரும் 'சுகாதாரத்துறை'!