'தந்தை' ஸ்தானத்தில் இயங்கினேன்.. 'அழுகுரல்' என்னுள் இன்னும் ஒலிக்கிறது.. அமைச்சர் விஜயபாஸ்கர் வேதனை!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கடந்த வெள்ளிக்கிழமை மாலை 5.40 மணியளவில் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த 2 வயது குழந்தை சுஜித் 4 நாட்களுக்குப் பின் இன்று அதிகாலை 2.30 மணியளவில் சடலமாக மீட்கப்பட்டான்.உயிரிழந்த சுஜித்தின் உடலுக்கு ஏராளமானோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து கல்லறைத் தோட்டத்தில் இன்று காலை சுஜித் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்தநிலையில் கடந்த 4 நாட்களாக சுஜித் மீட்பு பணியில் தீவிரம் காட்டி முனைப்புடன் செயல்பட்ட சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயகுமார், சுஜித் மரணத்திற்கு கவிதை வடிவில் இரங்கல் தெரிவித்திருக்கிறார்.
நான் மட்டுமல்ல இந்த உலகமே தன் பிள்ளையாய் நினைத்த சுஜித்
அழுகுரல் என்னுள் இன்னும் ஒலிக்கிறது என் மனம் வலிக்கிறது
எப்படியும் வந்துவிடுவாய் என்றுதான் ஊனின்றி உறக்கமின்றி
இரவு பகலாய் இமை மூடாமல் உழைத்தோம்
இப்படி எம்மை புலம்பி அழ விடுவாய் என்று எண்ணவில்லை
கருவறை இருட்டு போல இருப்பாய் என நினைத்தோம்; கல்லறை
இருட்டாய் மாறுமென நினைக்கவில்லை
மருத்துவமனையில் வைத்து உச்சபட்ச மருத்துவம் வழங்க காத்திருந்தேன்
இப்போது மார்ச்சுவரியில் பார்க்கும் நிலையில் இதயம் கனத்து கிடக்கிறது
85 அடி ஆழத்தில் நான் கேட்ட உன் மூச்சு சத்தம் தான் மீட்பு
பணியில் தந்தை ஸ்தானத்தில் இயங்க வைத்தது
மனதை தேற்றி கொள்கிறேன்;ஏன் என்றால்
இனி நீ கடவுளின் குழந்தை சுஜித்
சோகத்தின் நிழலில் வேதனையின் வலியில்
என்று கவிதை எழுதி கீழே சி.விஜயபாஸ்கர் என கையொப்பம் இட்டிருக்கிறார். இந்த கவிதை சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்!
- ‘இடைத்தேர்தல் முடிவுகள்’.. புதுச்சேரியில் காங்கிரஸ் வெற்றி..! தமிழகத்தில் நிலவரம் என்ன..?
- 1972-ல் நடந்த அந்த ட்விஸ்ட்.. எம்ஜிஆர் தொடங்கிய அதிமுகவுக்கு இப்போ 46 வயசு!
- காமராஜரின் நினைவுதினமும், காந்தி பிறந்த அக்டோபர் 2 தானே?.. 'கண்டுகொள்ளப் படவில்லையா 'கருப்பு காந்தி'?
- 'சுபஸ்ரீ மரணம்' குறித்த பேச்சு...படம் ஓடுவதற்காக 'விஜய்' அரசியல் பேசுகிறார்!
- 'தீபாவளி' சிறப்பு பேருந்துகள் 'முன்பதிவு'...உங்க 'பஸ்' எந்த ஏரியான்னு தெரிஞ்சுக்கங்க!
- 'அலறிய சுபஸ்ரீ'...'தாமதமான ஆம்புலன்ஸ்'... 'எப்படியாவது காப்பாத்தணும்'...லோடு ஆட்டோ'வில் கொண்டு செல்லப்பட்ட காட்சிகள்!
- 'சுபஸ்ரீயின் உயிரை காவு வாங்கிய பேனர்'...'வெளியான சிசிடிவி காட்சிகள்'...'பதற வைக்கும் வீடியோ'!
- 'சுபஸ்ரீ எனக்கு ஒரே பொண்ணு'...'அவ என்ன கனவு கண்டா தெரியுமா'?...'கதறிய தந்தை'...உருகவைக்கும் வீடியோ!
- 'தப்பான தகவலை சொல்லாதீங்க'...'வாட்ஸ் அப்பில் பரவும் வதந்தி'... பேனர் வைத்த கவுன்சிலர் மீது வழக்கு!