தமிழகத்தில் தடுப்பூசி கையிருப்பு என்ன..? சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் விளக்கம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் கையிருப்பில் உள்ள தடுப்பூசி குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பு பணிகள் குறித்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் இன்று நந்தம்பாக்கத்தில் அவர் செய்தியாளர்களை சந்திந்தார். அப்போது பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், ‘தடுப்பூசி தொடர்பாக குற்றச்சாட்டு வைப்பதை தவிர்க்க வேண்டும். மத்திய அரசிடம் இருந்து தடுப்பூசி பெற்று தரும் பணியை தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் செய்ய வேண்டும். தமிழகத்திற்கு கூடுதல் தடுப்பூசிகளை பெற்று தருவது பாஜகவின் கடமை.
தமிழகத்தில் கையிருப்பில் உள்ள 5 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் இன்னும் 2 நாட்களில் காலியாகிவிடும். 25 லட்சம் தடுப்பூசிகள் தரவேண்டிய நிலையில் 13 லட்சம் தடுப்பூசிகள் வந்துள்ளன. மத்திய அரசு இன்னும் 12 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை தரவேண்டியுள்ளது.
முழு ஊரடங்கு கசப்பான மருந்தாக இருந்தாலும் மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். மக்களுக்கு எந்தவித பாதிப்பும் வந்துவிட கூடாது என்பதற்காகவே தளர்வுகளற்ற ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும். சென்னைக்கு அடுத்து கோவையில் தான் அதிக தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
வானதி ஸ்ரீனிவாசனுக்கு கோவை மக்கள் மீது அக்கறை இருந்தால் மத்திய அரசிடம் இருந்து கூடுதல் தடுப்பூசிகளை பெற்றுத்தர வேண்டும். தமிழகத்தில் புதிய பாதிப்பை விட குணமடைவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மிக விரைவில் தொற்று இல்லாத மாநிலமாக தமிழகம் மாறும்’ என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- VIDEO: தமிழகத்தில் முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா..? சுகாதாரத்துறை அமைச்சர் விளக்கம்..!
- ‘பொது இடங்களில் இதை யாரும் டிரை பண்ணாதீங்க’!.. ‘இதனால கொரோனா பரவும் அபாயம் இருக்கு’.. சுகாதாரத்துறை அமைச்சர் எச்சரிக்கை..!
- 'மத்திய அரசு கொடுக்கும் தடுப்பூசி போதாது'... 'அதிரடி அறிவிப்பை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்'... குவியும் பாராட்டு!
- தடுப்பூசி பாதுகாப்பானாது: கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களில் சிலருக்கு மட்டுமே மீண்டும் நோய் தொற்று - இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) விளக்கம்..!
- சென்னை வந்தடைந்த கொரோனா தடுப்பூசிகள்!.. எந்தெந்த மாவட்டத்துக்கு எவ்வளவு?.. முழுவிவரம் உள்ளே!
- இந்த 3 ‘தடுப்பூசி’தான் நல்ல பலன் கொடுக்கும்.. மற்றவை சாதாரண ‘தண்ணீர்’ போலதான் இருக்கும்.. சீரம் சிஇஓ கருத்து..!
- கொரோனாவின் சித்து விளையாட்டை அம்பலப்படுத்திய விஞ்ஞானிகள்!.. தடுப்பூசிகளுக்கு அடங்காமல் இருப்பது ஏன்?.. வெளியான பரபரப்பு தகவல்!