'17,686 ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு குஷியான செய்தி!' - தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ‘முக்கிய’ அறிவிப்பு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழக மக்களுக்கும், மாணவர்களுக்கும், தொழில் புரிவோருக்கும் என பல்வேறு வகையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பல நன்மை பயக்கும் திட்டங்களையும், சலுகைகளையும் தொடர்ச்சியாக அறிவித்த வண்ணம் உள்ளார்.

அண்மையில் மாணவர்களுக்காக ஆன்லைன் வகுப்புக்காக தினந்தோறும் டேட்டா வழங்கும் திட்டம் கல்வி நிறுவனங்கள் மற்றும் மாணவர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு ஒன்றை தமிழக முதல்வர் வெளியிட்டுள்ளார். அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கைகள் மற்றும் வழக்குகள் தொடர்பாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதன்படி, கடந்த 2019ஆம் ஆண்டு ஜனவரியில் அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டபோது பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர். இதன் அடிப்படையில் ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க அரசு உத்தரவிட்டது. இந்நிலையில் தான் 17 ஆயிரத்து 686 ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மீது பதியப்பட்ட 408 வழக்குகளும் ரத்து செய்யப்படுவதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதிரடியாக அறிவித்திருக்கிறார்.

ALSO READ: ‘புதரை அகற்றும் போது கெடைச்ச புதையல்!’.. ‘மனக் கோட்டை எல்லாம் கட்டிய நபர்’.. கடைசியில் யூடர்ன் போட்ட ‘அதிர்ஷ்டம்!’

ஊழியர்கள் மீதான இந்த, வழக்குகள் வாபஸ் பெறக் கூடிய அறிவிப்பு அனைத்து அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்