'ஜாலியா ஆங்கிலம் கத்துக்கலாம்'... பழங்குடி மாணவர்களுக்காக அரசு எடுத்துள்ள முயற்சி!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

பழங்குடி மாணவர்கள் மத்தியில் இருக்கும் ஆங்கிலம் குறித்த பயத்தைப் போக்கும் விதமாக வேடிக்கையான முறையில் ஆங்கிலம் கற்றுக் கொடுக்கும் முறையைத் தமிழக பழங்குடியினர் நலத்துறை முன்னெடுத்துள்ளது.

ஆங்கிலம் பேசுவது மற்றும் அதில் இருக்கும் பயத்தை போக்குவது என்பது  முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. இதற்காகத் தமிழக பழங்குடியினர் நலத்துறை, தனியார் நிறுவனத்துடன் இணைந்து பழங்குடியினர் மாணவர்களுக்கு வேடிக்கையாக மற்றும் படைப்பு ரீதியாக ஆங்கிலம் கற்றுக் கொடுக்கும் முறையைக் கையில் எடுத்துள்ளது. இதற்காக 'Joyful English programme' என்ற பெயரில் பழங்குடியின மாணவர்கள் அதிகமாக இருக்கும் 131 பள்ளிகளில் 3 வருடங்களுக்கு இது செயல்படுத்தப் பட இருக்கிறது.

ஒரு வருடங்களுக்கு முன்பு, கோவை, சேலம் மாற்றுத் திருவண்ணாமலையில் உள்ள  25 அரசு பழங்குடியின பள்ளிகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது. இது கரடி பாதை கல்வி நிறுவனம் என்ற தனியார் அமைப்புடன் இணைந்து செயல்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம், மாணவர்கள் மத்தியில் பெரும் மாற்றம் ஏற்பட்டது. இதையடுத்து இந்த திட்டமானது 106 ஆரம்ப பள்ளிகளுக்கும், 25 நடுநிலைப் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது.

இதற்கிடையே இந்த கல்வி ஆண்டில் 3 ஆண்டுகளுக்கான இந்த திட்டம் தொடங்க இருக்கிறது. இதற்காகத் தமிழக அரசு சமீபத்தில் ஆணை பிறப்பித்திருந்த நிலையில், அதற்காக 4.34 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்