‘மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல்’!.. அவசர சட்டம் பிறப்பித்த தமிழக அரசு..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

மேயர் பதவிக்கு மறைமுகத் தேர்தல் நடத்துவதற்கான அவசர சட்டத்தை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ளதாக செய்திகள் வெளியாகிவரும் நிலையில் மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் பதவியை மறைமுக தேர்தலாக நடந்த இன்று தமிழக அரசு அவசர சட்டத்தைப் பிறப்பித்துள்ளது. இந்த அவசர சட்டத்துக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல் அளித்துள்ளார்.

இதன்மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் கவுன்சிலர்கள் மூலம் மேற்கூறிய தலைவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இது பஞ்சாயத்துராஜ் சட்டத்துக்கு எதிரானது என திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

ELECTIONS, TAMILNADU, MAYORS, LOCALBODYELECTION, PANCHAYATCHIEFS, TNGOVT

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்