பொது இடத்தில் மாஸ்க் அணியவில்லையா? அதிகரிக்கப்பட்டுள்ள அபராதத் தொகை..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழ்நாட்டில் பொது இடங்களில் மாஸ்க் அணியாதவர்களுக்கு விதிக்கப்படும் அபராதத் தொகை உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertising
>
Advertising

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவும் வேகம் அதிகரித்துள்ளதால் பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்துவதாக சமீபத்தில் அறிவித்திருந்தார். மேலும் வார நாட்களில் இரவு 10 மணி முதல் 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த சூழலில் கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கையின் காரணமாக பொது மக்கள் அனைவரும் பொது இடங்களில் மாஸ்க் அணிய வேண்டும் என்பது தமிழ்நாடு அரசால் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. மாஸ்க் அணியாமல் பொது இடங்களில் இருப்போருக்கு இதுவரையில் 200 ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டு வந்தது. இனி இந்த அபராதத் தொகை 500 ரூபாய் ஆக உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், முகத்தில் மாஸ்க் அணியும் போது மூக்கு மற்றும் வாய் பகுதிகள் முற்றிலும் மூடியிருப்பது போல் அணிந்திருக்க வேண்டும். மூக்குக் கீழ், கழுத்தில் மாஸ்க் அணிந்து இருந்தாலும் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிகரிக்கப்பட்ட அபராதத் தொகை அரசாணை அமலுக்கு வந்ததில் இருந்து இதுவரையில் தமிழ்நாடு முழுவதும் சுமார் 50 லட்சம் பேரிடம் இருந்து 105 கோடி ரூபாய் அபராதம் ஆக வசூல் செய்யப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிட்டத்தக்கது.

OMICRON, கொரோனா, ஒமைக்ரான், மாஸ்க், WAERING MASK, FINE AMOUNT, TN GOVT

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்