பொங்கல் பரிசு வாங்க போறீங்களா?.. அப்போ கட்டாயம் இதை பாலோ பண்ணணும்.. வெளியான ‘முக்கிய’ அறிவிப்பு..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

பொங்கல் பரிசு வழங்கல் தொடர்பாக நியாயவிலை கடைகள் மற்றும் குடும்ப அட்டைதாரர்கள் கடைபிடிக்க்க வேண்டிய விதிமுறைகளை உணவுப்பொருள் வழங்கல் துறை வெளியிட்டுள்ளது.

அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.2500 உடன் பொங்கல் பரிசு வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்தார். இந்த பரிசு தொகைக்கான டோக்கன் வரும் 26ம் தேதி முதல் வழங்கப்பட உள்ளது. ஜனவரி 13ம் தேதிக்குள் பொங்கல் பரிசை வழங்கி முடிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், உணவுப்பொருள் வழங்கல் துறை சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

1. பொங்கல் பரிசு தொகுப்பை வரும் ஜனவரி 4ம் தேதி தொடங்கி 12ம் தேதிக்குள் முடித்தல் வேண்டும். அதில் விடுபட்ட அட்டைதாரர்களுக்கு ஜனவரி 13ம் தேதிக்குள் வழங்க வேண்டும்.

2. வரும் 26ம் தேதி முதல் 30ம் தேதி வரை வீடு விடாக சென்று டோக்கன் விநியோகிக்கப்பட உள்ள நிலையில், ஒரு நாளைக்கு 200 குடும்ப அட்டைகளுக்கு மிகாமல் பொங்கல் பரிசினை வழங்க வேண்டும்.

3. பொங்கல் பரிசு தொகுப்பையும், 2500 ரொக்கப்பணத்தையும் அட்டைதாரர்களுக்கு ஒரே நேரத்தில் வழங்க வேண்டும். ரொக்கத்தொகையை 2000 மற்றும் 500 ரூபாய் தாள்களாகவும், அதற்கு வாய்ப்பு இல்லாத நேரத்தில் ஐந்து 500 ரூபாய் தாள்களாகவும் வழங்க வேண்டும். எந்த காரணத்தைக் கொண்டும் பணத்தை கவரில் வைத்து கொடுக்கக் கூடாது. இந்த பரிவர்த்தனையானது விற்பனை இயந்திரத்தின் மூலம் நடைபெறல் வேண்டும்.

4. பொங்கல் பரிசு தொகை வழங்கல் தொடர்பான பரிவர்த்தனையானது சம்பந்தப்பட்ட குடும்ப அட்டைதாரரின் செல்போனுக்கு குறுஞ்செய்தி வழியாக சென்றடைதல் வேண்டும்.

5. நியாயவிலை கடைக்கு வரும் குடும்ப அட்டைதாரர்கள் ஒரு மீட்டர் இடைவெளி விட்டு தங்களை தனிமைப்படுத்திக்கொண்டு பொருட்களை வாங்க வேண்டும். அதேபோல் முகக்கவசம் அணிந்து வருதல் கட்டாயமாகும்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்