தமிழக அரசுக்கு டாஸ்மாக் ஏன் தேவைப்படுகிறது?.. அரசு தரப்பு வக்கீல் பரபரப்பு வாதம்... வெளியான அதிர்ச்சி தகவல்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

டாஸ்மாக்கிற்கு பதில் வேறு துறைகள் மூலம் இந்த வருவாயை உருவாக்க நான்கைந்து ஆண்டுகள் ஆகும் என அரசுத் தரப்பு வழக்கறிஞர் ஐகோர்ட்டில் தெரிவித்தார்.

தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்க தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யும்படி நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

இந்நிலையில் இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்படவில்லை. விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய அவகாசம் வழங்கும்படி அரசு வழக்கறிஞர் கேட்டுக்கொண்டார்.

மாநிலத்தின் வளர்ச்சிக்கு டாஸ்மாக் வருவாய் முக்கிய பங்கு வகிப்பதாக கூறிய அரசு வழக்கறிஞர், டாஸ்மாக்கிற்கு பதில் வேறு துறைகள் மூலம் இந்த வருவாயை உருவாக்க 4 - 5 ஆண்டுகள் ஆகும் எனக் குறிப்பிட்டார். தொடர்ந்து வாதம் நடைபெற்றது.

திங்கட்கிழமையும் விசாரணை நடைபெறும் என நீதிபதிகள் அறிவித்துள்ளனர்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்