ஹைய்யா ஜாலி...! பொங்கல் 'பரிசுத்தொகை' உறுதி...! எவ்வளவு கிடைக்கும்...? - வெளியாகியுள்ள 'மகிழ்ச்சி' தகவல்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு ஜனவரி 3-ஆம் தேதி முதல் விநியோகிக்கப்பட உள்ளது.

Advertising
>
Advertising

இதனுடன் ரொக்கத் தொகையும் வழங்கப்படவுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு கூட்டுறவுத்துறை சங்கங்களின் பதிவாளர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் இடம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பொங்கல் திருநாளை அனைத்து குடும்பங்களும் சிறப்பாகக் கொண்டாடும் விதமாக அரிசி குடும்ப அட்டைதார்களுக்கும் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும்  22 பொருட்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கிட முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

அதில் பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய் போன்ற பொருள்களும், சமையலுக்கு தேவையான மளிகை பொருட்களும் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. அந்த வகையில் இந்த வருடமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

இந்த நிலையில், 22 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பினை 2 கோடியே 15 லட்சத்து 48 ஆயிரத்து 60 குடும்ப அட்டைதாரர்களுக்கு பயனாளி ஒருவருக்கு ரூபாய் 505 செலவில் வழங்க மொத்தம் ஆயிரத்து 88 கோடியே 17 லட்சத்து 70 ஆயிரத்து 300 ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து கடந்த நவம்பர் மாதம் அரசாணை வெளியானது.

பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட 21 வகையான பொருட்கள் அடங்கிய சிறப்பு தொகுப்பு வழங்க உத்தரவிட்ட நிலையில், கரும்பு விடுபட்டிருந்ததை அடுத்து, கரும்பு விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பு சேர்த்து வழங்கப்படும் என தமிழக அரசு சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இது தொடர்பாக அரசு ஆலோசனை நடத்து வருவதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், அதை உறுதிப்பபடுத்தும் விதமாக கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முக சுந்தரம் சென்னை மண்டலத்தின் கூடுதல் பதிவாளர், அனைத்து மண்டல இணை பதிவாளர் ஆகியோருக்கு சுற்றிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், ஒரே தவணையில் பரிசு தொகுப்பை வழங்க வேண்டும். சப்ளை பணி முறையாக நடக்க வாகனங்களும், 1,000 கார்டுகள் வரை உள்ள கடைகளில் இரு ஊழியர்களும், 1,000க்கும் மேற்பட்ட கார்டுகள் உள்ள கடைகளில் மூன்று ஊழியர்களும் இப்பணியில் ஈடுபட வேண்டும்.

இதன்மூலம் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரொக்கத்தொகையும் வழங்கப்படுவது உறுதி ஆகியுள்ளது. ஒரு கார்டுக்கு எத்தனை ரூபாய் என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. ஆனால், 1000 அல்லது 2000 வழங்குவதற்கு வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

TN GOVT, PRIZE MONEY, PONGAL GIFT, பொங்கல் பரிசு, பரிசு தொகை, பொங்கல்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்