‘இனி இ-பாஸ் ஈஸியா பெறலாம்!’.. ‘அதிரடி’ மாற்றங்களுடன் கூடிய ‘இந்த’ புதிய ‘வசதி’! - தமிழக அரசு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் மாவட்டங்களுக்கு இடையே பயணிக்க விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் (ePass) வழங்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் கொரோனா (Covid19Pandemic) பரவுவதைத் தடுக்க தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆலோசனையின்படி பல்வேறு கட்டுப்பாடுகள் தீவிரமாக அமல்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி மாவட்டங்களுக்கிடையே பயணிப்பதற்கு நேற்று வரை இ-பாஸ் கட்டாயமாக இருந்தது. குறிப்பாக குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய உறவினர் இறப்பு நிகழ்வு, திருமணம் மருத்துவம், வெளியூரில் சிக்கி தவிக்கும் சூழல் உள்ளிட்ட அத்தியாவசிய காரணங்களுக்காக மட்டுமே மாவட்டங்களுக்கு இடையே பயணிக்கும் இ-பாஸ் வழங்கப்பட்டது.
இதனிடையே பல மாவட்டங்களில் இ-பாஸ் வழங்குவதில் பொதுமக்கள் பெரும் சிரமத்தை சந்தித்து வருவதாக எழுந்த கோரிக்கைகளை அடுத்து தமிழக அரசு இ-பாஸ் வழங்குவதில் சில தளர்வுகளை தற்போது அமல்படுத்தியது. அதன்படி மாவட்டங்களுக்கு இடையே பயணிக்க விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் வழங்கும் முறை கொண்டுவரப்பட்டுள்ளது. ஆதார், குடும்ப அட்டை, செல்பேசி எண் விவரங்களுடன் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் தாமதமின்றி உடனடியாக இ-பாஸ் வழங்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் ஆட்டோ-ஜெனரேட் எனப்படும் தானியங்கி முறையில் உடனடியாக இ-பாஸ் பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதியுடன் கூடிய சில மாற்றங்களை ஆன்லைனில் செய்துள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். எனினும் பொதுமக்கள் தேவையற்ற காரணங்களுக்காக இ-பாஸ் விண்ணப்பிப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'ஒன்றல்ல, ரெண்டல்ல மொத்தம் 3 தடுப்பூசிகள்...' இந்திய மக்களுக்கு எப்போது தான் கிடைக்கும்...? - உச்சக்கட்ட ஆய்வில் விஞ்ஞானிகள்...!
- Work From Home-ல இப்படி ஒரு சிக்கல் இருக்கா!?.. சம்பள விவகாரத்தில் HR-கள் குழப்பம்!.. ஊழியர்களுக்கு அடித்த 'ஷாக்'!
- 'நீங்க வேணும்னா எடுத்துக்கோங்க... 'இந்த மருந்து' எங்களுக்கு வேண்டாம்'!.. ரஷ்ய மருத்துவர்கள் கூறுவது என்ன?.. வெளியான 'பகீர்' தகவல்!
- மனைவிக்கு தெரியாமல் இரவு விடுதிக்கு நடனம் பார்க்கச் சென்ற 550 பேர்!.. இப்போ ‘வெளியில் சொல்ல முடியாத’ அளவுக்கு ஏற்பட்ட ‘பரிதாப நிலை!’.. அப்படி என்னதான் நடந்தது?
- 'முன்பைவிட 10 மடங்கு சக்திவாய்ந்த வைரஸ்'... 'தற்போதைய தடுப்பூசிகள் கூட பலனளிக்காமல் போகலாம்... 'சிவகங்கை நபரால் போராடும் நாடு!'...
- 'இப்படி எல்லாம் கூட கொரோனா வைரஸ் பரவுமா?'... 'சீனா கொடுத்த ஷாக்'... 'உலக சுகாதார அமைப்பு விளக்கம்!'...
- ‘ரத்தத்தை உடலுக்கு பம்ப் செய்து அனுப்பும்!’.. ‘பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு’ அளிக்கப்பட்டு வரும் எக்மோ சிகிச்சை என்பது என்ன? - முழு விபரம்!
- 'தமிழகத்தில் 90% உயிரிழப்புக்கு இதுவே காரணம்'... 'பீதி தேவையில்லை இதை பண்ணுங்க'... 'அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்'...
- 'முதல்ல வெயிட் செக் பண்ணிட்டு தான் ஆர்டர்'... 'அதுவும் எடைக்கேற்ற கலோரியில்'... 'என்ன காரணம்?' 'கடும் எதிர்ப்புக்கு ஆளான சீன உணவகம்!'...
- ‘ZOOM ஆன்லைன் வகுப்பில் இருந்த சிறுமி!’.. திடீரென திரையில், தோன்றிய குலைநடுங்கும் காட்சி! ஆசிரியர் செய்த சமயோஜித காரியம்! அதன் பின் நடந்த சோகம்!