தமிழகத்தில்... இன்னும் '4' மாவட்டங்களில்... முழு 'ஊரடங்கு'க்கு வாய்ப்பு?... வெளியான 'தகவல்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதையடுத்து , அதிகம் பாதிப்புள்ள மாவட்டங்களான சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கடந்த 19 ஆம் தேதி முதல் வரும் 30 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், தமிழகத்தின் மற்ற சில மாவட்டங்களிலும், கொரோனா தொற்று மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளன. மதுரை, வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் அங்கும் முழு ஊரடங்கை அமல்படுத்துவது தொடர்பாக மாவட்ட நிர்வாகிகளுடன் தமிழக அரசு ஆலசோனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நேற்று வரை மதுரையில் 705 பேரும், திருவண்ணாமலை மாவட்டத்தில் 1,060 பேரும், வேலூரில் 477 பேர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் 470 பெரும் கொரோனா தொற்று மூலம் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்