மது அருந்திவிட்டு வாகனம்.. பின்னால் அமர்ந்திருப்பவருக்கும் அபராதம்..!!.. அக்.26-ஆம் தேதி முதல் அமலுக்கு வருதா?
முகப்பு > செய்திகள் > தமிழகம்போக்குவரத்து விதிமீறல்களுக்கான புதிய அரசாணையை தமிழக அரசு அண்மையில் வெளியிட்டது.
ஒவ்வொரு மாநில அரசும் சாலை விபத்துகளை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவரும் நிலையில், தமிழக அரசு போக்குவரத்து விதிமீறலுக்கான புதிய அரசாரணையை சமீபத்தில் வெளியிட்டிருந்தது. இதில் முக்கிய அம்சமாக மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவருடன் பயணிக்கக் கூடிய அந்த நபர்களுக்கும் அபராதம் விதிக்கப்படும் என்கிற விதிமுறை அறிவிக்கப்பட்டது பிரபலமானது.
இதேபோல், ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அவசரகால வாகனங்களுக்கு வழிவிடாதவர்களுக்கான அபராதமும் அறிவிக்கப்பட்டது. ஆம், அவசரகால வாகனங்களுக்கு வழிவிட தவறினால் ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டதுடன், அதிக அளவில் ஒலிமாசுபாடு ஏற்படுத்தும் வாகன ஓட்டிகள், வரம்பு மீறி சரக்கு ஏற்றிச் செல்லும் வாகனங்கள் உட்பட பலவற்றுக்கும் அபராதம் விதிப்பது குறித்த புதிய அரசாணை வெளியானது.
அடிப்படை விதிகளான ஹெல்மெட் அணியாவிட்டால் ரூ.1000 அபராதம், அனுமதிக்கப்பட்டதை விட கூடுதல் அளவிலான சரக்குகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு 20 ஆயிரம் ரூபாய் அபராதம், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவோர் மற்றும் அவருடன் பயணிப்போருக்கு பத்தாயிரம் வரை அபராதம் உள்ளிட்டவை அறிவிக்கப்பட்டன, அத்துடன் அல்லாமல், பதிவு செய்யப்படாத வாகனங்கள் பிடிபட்டால், 2,500 ரூபாய் அபராதம் இதுவரை விதிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் அந்த தொகை தற்போது 5000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், இன்சூரன்ஸ் இன்றி வண்டி ஓட்டுபவர்களுக்கு 2000 ரூபாய் அபராதமாக விதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
குறிப்பாக அபாயகரமாக வாகனங்களை இயக்குபவர்களுக்கும், வாகன பந்தயங்களில் ஈடுபடுவோருக்குமான அபராதம் 10 ஆயிரம் ரூபாயாக அறிவிக்கப்பட்டிருந்தது. திருத்தப்பட்ட இந்த மோட்டார் வாகன சட்ட விதிகள் வரும் 28-ஆம் தேதி முதல் அமலாகும் என்றும், அன்று முதல் அபராதம் வசூலிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த விதிகளும் அபராத வசூலிப்புகளும் அக்டோபர் 26-ஆம் தேதி முதலே நடைமுறைப்படுத்தப்படுவதாக புதிய தகவல்கள் கூறப்பட்டு வருகின்றன.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- வருது.. வருது.. இந்த வருசம் ஜல்லிக்கட்டு... தமிழக அரசு சொல்வது என்ன? பரபரப்பு தகவல்கள்!!
- 'தமிழ்நாட்டில் வனப்பகுதி ஆக்கிரமிப்பு குறித்த சட்டங்கள் வலுப்பெறுகிறதா'?.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!.. சூழலியலாளர்கள் வரவேற்பு!
- ”பெரும் எதிர்பார்ப்புக்கு பிறகு... அரசின் ’அதிரடி’ அறிவிப்பால்... குஷியான மாணவர்கள்!’ ...’பெருமூச்சு விடும் பெற்றோர்கள்!”
- இன்று முதல் ‘இ-பதிவு’ கட்டாயம்.. எதற்கெல்லாம் அனுமதி..? எப்படி விண்ணப்பிக்க வேண்டும்..? வெளியான முழு விவரம்..!
- 'சொன்னதை செய்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி...' 'நகைக் கடன் தள்ளுபடி...' - பணிகளை தொடங்கிய கூட்டுறவுத்துறை, விரைவில் தள்ளுபடி ரசீது...!
- 'இது நூறு வருஷ கனவு...' 'காவிரி - குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு...' - அடிக்கல் நாட்டிய தமிழக முதல்வர்...!
- ரசிகர்களின் அபிமான ‘ஹீரோக்களின்’ படங்கள் ரிலீஸ்.. '100% தளர்வுடன் திரையரங்குகள் இயங்குமா?'.. அமைச்சர் கூறிய முக்கிய தகவல்?
- “தமிழகத்திலும் கொரோனா தடுப்பூசி... வெகு விரைவில் துவங்க இருக்கிறது தமிழக அரசு..!” - ஊசி போடும் ‘தேதியுடன்’ விவரங்களை அறிவித்த சுகாதாரத்துறை!!
- 'இந்தியாவின் காப்பர் தேவை எந்த அளவுக்கு இருக்கு தெரியுமா'?.. ஸ்டெர்லைட் ஆலையை திறக்க... உச்ச நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் காரசார விவாதம்!
- தமிழக அரசு துறைகளில் புதுசா ‘இப்படி ஒரு போஸ்டிங்!’ .. இனி ‘இவங்களுக்கு’ அரசுப் பணி கிடைக்க வாய்ப்பு!