கொரோனா தடுப்பு பணிக்காக... 'சென்னை'யில் இதுவரை செலவு செய்யப்பட்ட தொகை... எத்தனை 'கோடி'கள் தெரியுமா?
முகப்பு > செய்திகள் > தமிழகம்கொரோனாவை கட்டுப்படுத்த சென்னையில் இதுவரை ரூ.400 கோடி வரை செலவாகி உள்ளது என்று மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் தெரிவித்தார்.
சென்னை மாநகராட்சியின் அனைத்து செயல்பாடுகளையும் ஒளிவு, மறைவு இன்றி மாநகராட்சியின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்து வருகிறோம். தற்போது சென்னையில் நாள் ஒன்றுக்கு 13 ஆயிரம் பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. சென்னையில் இதுவரை 5 லட்சத்துக்கும் மேற்பட்டவர் களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர் முறை யில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியில் ஒரு மாதத்துக்கு முன்னர் பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 35 விகிதமாக இருந்தது. தற்போது பரிசோதனை எண்ணிக்கையை அதிகரித்தன் மூலம் பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 முதல் 12 விகிதமாக மாறியுள்ளது.
அதாவது 4 ஆயிரம் பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தும் போது 1,500 எண்ணிக்கையில் தொற்று உறுதி செய்யப்பட்டு வந்தது. தற்போது 13 ஆயிரம் பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தும் போது 1,200 முதல் 1,300 என்ற எண்ணிக்கையில் தான் தொற்று உறுதி செய்யப்படுகிறது.
சென்னையில் இதுவரை 18 ஆயிரம் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. 11 லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் முகாமில் கலந்து கொண்டனர். இதன் மூலம் 60 ஆயிரம் நபர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதில் 80 சதவீதம் பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தினமும் 40 ஆயிரம் நபர்கள் சென்னையில் தனிமைப்படுத்தப்படுகின்றனர்.
கொரோனாவுக்காக சென்னை மாநகராட்சியில் இதுவரை தோராயமாக ரூ.400 கோடி வரை செலவாகி உள்ளது. சென்னையில் தற்போது மேற்கொள்ளப்படும் தடுப்பு நடவடிக்கையால், கொரோனா தொற்று இரட்டிப்பாக கிட்டத்தட்ட 47 நாட்கள் ஆகிறது. உதாரணமாக 50 என்ற எண்ணிக்கை 100 ஆவதற்கு 47 நாட்கள் எடுத்து கொள்கிறது.
ஏற்கனவே சென்னையில் ஊரடங்கு தளர்வுடன் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஊரடங்கு தளர்வை மேலும் பாதுகாப்பான முறையில் கடைப்பிடிக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முகக்கவசம், சமூக இடைவெளி மட்டுமே கொரோனாவுக்கான தடுப்பு மருந்து. இதை 4 மாதங்களுக்கு தொடர்ந்து பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'கதறிய இளைஞர்'... 'எந்த ஒரு மகனுக்கும் இப்படி ஒரு கொடூரம் நடக்கக் கூடாது'... இதயத்தை நொறுக்கிய சம்பவம்!
- 'உன்ன கண்ணுக்குள்ள வச்சு பாத்துப்பேன்னு சொன்னேன்ல'... 'நிறைமாத கர்ப்பிணிக்காகக் கணவன் எடுத்த ரிஸ்க்'... எதிர்பாராமல் நடந்த திருப்பம்!
- 'நைட் 1.30 மணி வரை டூட்டி'... 'பார்க்கிங்யில் துடிக்க துடிக்க கிடந்த இளம் மருத்துவர்'... சென்னையை அதிரவைத்துள்ள சம்பவம்!
- 'சென்னையில் ஆச்சரியம்'... 'ஞாயிற்றுக்கிழமை வெளியே வந்தால் இதுதான் நடக்கும்'... நேப்பியர் பாலத்தில் மாஸ் காட்டும் நாய்!
- “போடுறா வெடிய!.. நான் ஆடியே தீரணும்!”.. ரோட்டில் இருந்து குத்தாட்டம் போட்டபடியே தாயை வரவேற்ற இளம் மகள்!
- உலகிலேயே கொரோனா 'ரொம்ப' கம்மியாக இருக்கும்... 'டாப் 5' நாடுகள் இதுதான்!
- "ஹேக்கிங் குழு... உளவுத்துறை கூட்டணி"!? கொரோனா தடுப்பூசி விவரங்களை திருடியதா ரஷ்யா?
- இந்தியா முழுவதும் மிகப்பெரிய அளவில் COVAXIN பரிசோதனை!.. தயார் நிலையில் மருத்துவமனைகள்!.. அடுத்தது என்ன?
- கோவையில் இன்று 135 பேருக்கு கொரோனா!.. மதுரையில் 8 அயிரத்தை கடந்தது பாதிப்பு எண்ணிக்கை!.. பிற மாவட்டங்களில் கொரோனா நிலவரம் என்ன?
- தமிழகத்தில் 1 லட்சத்துக்கும் அதிகமான ஆண்களுக்கு கொரோனா பாதிப்பு!.. பலி எண்ணிக்கை?.. முழு விவரம் உள்ளே