தமிழகத்தில் 'பத்தாம்' வகுப்பு பொதுத் தேர்வுகள் 'ரத்து'... எந்த அடிப்படையில் 'மதிப்பெண்கள்' வழங்கப்படும்?... தமிழக 'முதல்வர்' அறிவிப்பு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில், கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்கான தேர்வும் தள்ளிப் போனது.

Advertising
Advertising

இந்நிலையில், தமிழகத்தில் 10 மற்றும் 11 - ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், காலாண்டு, அரையாண்டு தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் 80 % மதிப்பெண் அளிக்கப்படும் எனவும், எஞ்சிய 20 % மதிப்பெண்கள் மாணவர்களின் வருகை அடிப்படையில் நிர்ணயிக்கப்படும் எனவும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

மேலும், நிலுவையில் உள்ள 12 - ஆம் வகுப்பு தேர்வு குறித்து பின்னர் அறிவிப்பு வெளியிடப்படும் எனவும் முதல்வர் தெரிவித்துள்ளார். அதே போல 11 - ஆம் வகுப்பில் விடுபட்ட பாடத்திற்கான தேர்வும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக, கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை கருத்தில் கொண்டு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பத்தாம் வகுப்பு தேர்வை ரத்து செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்