“கொரோனா வந்த 2 மாசத்துலதான் வருமானத்தை மீறி சொத்து சேத்தாங்களா ஐஏஎஸ் அதிகாரி பீலா ராஜேஷ்?”.. ஓய்வு பெற்ற காவல் அதிகாரியின் ‘பளீச்’ பதில்கள்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

ஓய்வுபெற்ற காவலர் வரதராஜன் பிஹைண்ட்வுட்ஸ்க்கு அளித்த பிரத்தியேக நேர்காணலில் பகிர்ந்தவற்றின் சுருக்கம்:

“ஒரு நடுநிலை நோக்கத்துடன் நான் இந்த கருத்தை பகிர்கிறேன். பீலா ராஜேஷ் ஒரு ஐஏஎஸ். அவர் மீது புகார் அளிக்க வேண்டுமானால் மத்திய அரசாங்கத்தில்தான் புகார் அளிக்க முடியும். காரணம் பீலா ராஜேஷ் ஐஏஎஸ் மத்திய அரசாங்கத்தின் ஊழியர். ஆக, வருமானத்துக்கு மீறி சொத்து சேர்த்ததாக பீலா ராஜேஷ் மீது ஒரு புகார் வந்தது. மத்திய அரசாங்கத்திடம் இருந்து இந்த புகாரை விசாரிக்க, உத்தரவு வந்திருக்கிறது. அவ்வளவுதான். புகார் வந்ததால் அவங்க கெட்டவங்க. மத்தவங்களாம் நல்லவங்கனு அர்த்தம் இல்ல.

பீலா ராஜேஷ் அடிப்படையில ஒரு எம்.பி.பி.எஸ்., இவரின் தகப்பனார் எல்.என்.வெங்கடேசன். அவர் ஐபிஎஸ் அதிகாரி, தமிழ்நாடு காவல்துறையில் ஏடிஜிபி ரேங்க் வரை பெற்றவர். பீலா ராஜேஷின் அம்மா ராணி வெங்கடேசன் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒரு அரசியலளார், இப்படி அவருடைய பின்னணி வலுவானது.

எம்பிபிஎஸ் படித்த பீலா ராஜேஷ், ஒரு சவாலான முறையில் ஐஏஎஸ் படித்து வந்தவர். இவருடைய கணவர் ராஜேஷ் தாஸ் என்கிற ஒரிஸாவைச் சேர்ந்தவர். ஐபிஎஸ் அதிகாரி மட்டுமல்லாது, என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட். அவர் ஆளுங்கட்சி என எவ்வித பாகுபாடுமின்றி யாராக இருந்தாலும் தவறு செய்தாலும் கைது செய்துவிடுவார். எவ்வித ஊழல் குற்றச்சாட்டுகள் அறவே இல்லை. அவர் நேர்மறையான அதிகாரி.

கொரோனா வந்த 2 மாதத்திலேயே சுகாதாராத் துறை செயலராக இருந்த பீலா ராஜேஷ், மிக நன்றாக செயல்பட்டார்கள். அவர் மாற்றப்பட்டதற்கு பின்னார் பெரிய அரசியல் உள்ளது. அவர் ஒரு திறமையான பெண்மணி, அவர் மீது எவ்வித தவறான புகார்களும் எழவில்லை. கொரோனா நேரத்தில் தொடர் அறிக்கைகளை பீலா ராஜேஷ் கொடுத்து வந்தார். கொரோனா பலி எண்ணிக்கையை மறைக்காமல் மக்களுக்கு அறிவிப்பதில் பீலா ராஜேஷ் உறுதியாக இருந்தார். ஐஏஎஸ் அதிகாரிகளுக்குள் பெரிய அரசியல் நிலவுகிறது. அவர்கள் நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்பதற்காக பீலா ராஜேஷை ஓரம் கட்டியுள்ளனர்.

மகாபலிபுரத்திற்கு அருகே உள்ள தையூர் கிராமப்பகுதியில் குறைவான விலையில் விவசாய நிலங்களை 90களில் வாங்கியிருந்தார் பீலா ராஜேஷ். அந்த வீடுகள், எத்தனை ஏக்கர் என்பது போன்ற கேள்விகளுடன் புகைப்படங்களுடன் வந்தன. ஆனால் அந்த இடம், பங்களா உள்ளிட்டவை ராஜேஷ் தாஸ் பெயரில் உள்ளவை. அவர்கள் அந்த இடத்தில் கட்டப்பட்ட வீட்டுக்கு எச்டிஎப்சி வங்கியில் கடன் வாங்கியதாக ராஜேஷ் தாஸ் தெரிவித்துள்ளார். 10 ஆண்டுகளுக்கு முன்பே அரசின் உரிய அனுமதி பெற்ற பின்பே அந்த வீட்டை அவர்கள் கட்டியுள்ளனர். பீலா ராஜேஷின் தகப்பனார் உதவியுடன் அந்த வீட்டை கட்டியதாக பீலா ராஜேஷ் தெரிவித்திருந்தார். கொரோனா வந்த 2 மாதத்திலேயே சுகாதாராத் துறை செயலராக இருந்த பீலா ராஜேஷ் அத்தனையும் சம்பாதித்தார் என்பதெல்லாம் கட்டுக்கதை என்பதுதான் என்னுடைய கருத்து. இருவருமே நேர்மையான அதிகாரிகள். இந்த சொத்துக்குவிப்பு புகார்கள் நிரூபிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் கிடையாது.

அதிகாரிகளுக்குள், அரசாங்க பதவிக்குள் இருப்பவர்களுக்குள் நிலவும் நிர்வாக அரசியல், போட்டி பொறாமை உள்ளிட்டவற்றால் இப்படியான விஷயங்களை தூண்டிவிடுவது, இடமாற்ற தொந்தரவு உள்ளிட்டவற்றை செய்வார்கள். எம்ஜிஆர் ஆட்சியில் இருந்த அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் இதைச் செய்தார்கள். ஆனால் எம்ஜிஆர் கண்டித்தார். அவரும் இப்படி செய்ததில்லை. எம்.பி.பி.எஸ் படித்த பீலா ராஜேஷ் ஒரு பிரச்சனையில் சவால் விட்டு, தான் ஐஏஎஸ் ஆகியுள்ளார். இவர்களுக்கு பிடிக்காதவர்கள் யாராவது செய்த வேலைதான் இது. விசாரணை என வரும்போது நிரூபிப்பதற்கான வாய்ப்புகள் இல்லை. இவர்களின் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் அறவே இருந்ததில்லை.

அவர்களுக்கு இருக்கும் அந்த இடத்தை அவர்கள் வாங்கும்போது என்ன மார்க்கெட் மதிப்பு, அதை இப்போதைய மார்க்கெட் மதிப்புடன் ஒப்பிட்டு குற்றச்சாட்டுகளை வைக்கிறார்களா? என்பன போன்ற கேள்விகள் உள்ளது. சொத்து, நிர்வாகம், அரசு ஊழியர்களின் விதிமுறைகள் உள்ளிட்ட விஷயங்களில் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு அரசாங்கத்தின் எல்லா வரம்புகளுமே தெரியும். அவற்றை மீறி அவர்கள் எதையும் செய்ய மாட்டார்கள்.

மத்திய அரசாங்க ஊழியர்களான ஐஏஎஸ் அதிகாரிகள் தலைமை செயலாளரின் கட்டுப்பாட்டுக்குக் கீழ் வந்தாலும், இவர்களின் மீதான புகார்களை லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவினர் விசாரிப்பார்கள். நம்மூரை பொருத்தவரை மந்திரிகள் படிக்காதவர்களாகவும், அவர்களுக்குக் கீழ் இருக்கும் ஐஏஎஸ் அதிகாரிகள் படித்தவர்களாகவும் இருப்பதை காண முடியும். அந்த அரசியல்வாதிகளுக்கான அரசியல் ஆதாயத்துக்காக பலருக்கு போஸ்டிங் போடுவதற்கான கையெழுத்தினை ஐஏஎஸ் அதிகாரிகள் போட மறுத்தால் கடும் நெருக்கடிகளை சந்திக்க நேரிடும். அவர்களை வேற பிரச்சனைகளில் மாட்டிவிடுவார்கள். தமிழ்நாட்டிலேயே நடந்தவைதான் இதெல்லாம். ஜெயலலிதாவின் ஆட்சியின்போது எஸ்.ஐ செலக்‌ஷனின் போது நேர்மையான டிஜிபி அதிகாரியை நியமித்தார். ஆனால் ‘பரிந்துரை அரசியல் பிரச்சனைகள்’ வரக்கூடாது என நினைத்த அந்த அதிகாரி, ஜெயலலிதா அம்மாவிடம், தான் தகுதியின் அடிப்படையில்தான் செலக்ட் பண்ணுவேன் என கூறியபோது ஜெயலலிதா அதனால்தான் அவரை நியமித்ததாகக் கூறி முழு சுதந்திரத்துடன் நேர்மையாக செயல்பட அனுமதி அளித்தார். ஆனால் அந்த அதிகாரியின் டிரைவரே தனது தம்பிக்காக ரெக்கமண்டேஷன் கேட்டார். அந்த பக்கம் ஜெயலலிதா அம்மாவிடம் பலரும் ரெக்கமண்டேஷன் கோரிக்கை வைக்கின்றனர். இறுதியாக ஜெயலலிதாவிடம் இருந்த ரெக்கமண்டேஷன் லிஸ்டில் இருந்தவர்களை மெரிட்டில் செலக்ட் செய்தனர். இப்படியும் தமிழ்நாட்டில் நடந்தது”

ஓய்வுபெற்ற காவலர் வரதராஜன் பிஹைண்ட்வுட்ஸ்க்கு அளித்த பிரத்தியேக நேர்காணல் வீடியோவை இணைப்பில் காணலாம்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்