தமிழ்நாட்டில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு.. சுகாதாரத்துறை அமைச்சர் அறிவிப்பு..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழ்நாட்டில் கோரோனோ கட்டுப்பாடுகளை கடுமையாக குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் மீண்டும் ஆலோசனை மேற்கொண்டார்.

Advertising
>
Advertising

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனிடையே தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் பரவலும் தமிழகத்தை அச்சுறுத்தி வருகிறது. அதனால் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக மருத்துவ வல்லுனர்கள் உடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. குறிப்பாக வார இறுதி நாட்களில் வழிபாட்டுத் தலங்களுக்கு அனுமதி இல்லை கடைகளின் நேரத்தை குறைப்பது இரவு நேர ஊரடங்கு உள்ளிட்டவை ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தமிழக சட்டப்பேரவை கூட்டம் இன்று கலைவாணர் அரங்கில் நடைபெற்றது கூட்டம் முடிந்தபின் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொரோனா கட்டுப்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்திந்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழ்நாட்டில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார். அத்தியாவசிய தேவை இல்லாமல் மக்கள் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார். மேலும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் கொரோனா தடுப்பூசி முகாம் சனிக்கிழமை நடைபெறும் என அவர் தெரிவித்துள்ளார்.

CORONA, OMICRON, LOCKDOWN

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்