'ஒரே நாளில் சட்டங்களை திருத்தி எழுதவைத்த.. 2 வயது குழந்தை சுஜித்'.. தமிழக அரசு அதிரடி!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழும் குழந்தைகளை காப்பாற்றுவதற்கு தகுந்த தொழில்நுட்பத்தை கண்டுபிடிப்பவர்களுக்கு, 5 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத்துறை அறிவித்துள்ளது.
திருச்சி மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டியில் சுஜித் என்ற 2 வயது குழந்தை, கடந்த வெள்ளிக் கிழமை ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்தான். சிறுவனை மீட்கும் பணி 80 மணி நேரம் நடைப்பெற்றது. இருப்பினும் 4 நாட்கள் போராடியும் அந்த சிறுவனை உயிருடன் மீட்க முடியாமல்போனது.
இந்நிலையில் ஆழ்துளை கிணற்றுக்குள் விழும் குழந்தைகளை காப்பாற்றுவதற்கான தொழில்நுட்பத்தை கண்டுபிடிக்க, தமிழ்நாடு அரசு சார்பில் ஒரு ஹேக்கத்தான் நடத்தப்பட உள்ளது. இதில் ஆழ்துளை கிணற்றுக்குள் விழும் குழந்தைகளை மீட்பதற்கான தொழிநுட்பத்தையோ அல்லது அது தொடர்பான செயல் விளக்கம் அளிக்கும் கருவியையோ கண்டுபிடிக்கலாம்.
கண்டுபிக்கப்படும் சிறந்த தொழில்நுட்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை தமிழ்நாடு அரசின் தகவல் தொழில்நுட்ப துறை செயலாளர் சந்தோஷ் பாபு தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அதுமட்டுமல்லாமல், பயன்படாத ஆழ்துளைக் கிணறுகளை 24 மணி நேரத்தில் மழைநீர் சேகரிப்புக் கட்டமைப்பாக மாற்றவேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ள தமிழக குடிநீர் வாரியம், அதற்காக 9445802145 என்கிற எண்ணில் அழைக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘80 மணிநேர போராட்டம் தோல்வியில் முடிந்தது’.. ‘குழந்தை சுஜித் சடலமாக மீட்பு’..
- ‘மீட்புப் பணி நிலவரம் குறித்து கேட்டறிந்த பிரதமர் மோடி’.. ‘குழந்தை சுர்ஜித்துக்காக பிரார்த்தனை’..
- ‘தொடரும் மீட்புப் போராட்டம்’.. ‘இறுதி முடிவு எடுக்க வேண்டிய தருணத்தில் இருக்கிறோம்’.. ‘அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி’..
- ‘4வது நாளாகத் தொடரும் மீட்புப் பணி’.. ‘கடினமான பாறைகளால்’.. ‘தடைபட்ட துளையிடும் பணி வேகமெடுத்தது’..
- ‘அழுகாத சாமி, அம்மா எப்படினாலும் உனைய மேல் எடுத்துறேன்’.. ‘தாயின் பாசப்போராட்டம்’ மனதை உருக்கிய புகைப்படம்..!
- ‘அம்மா இருக்கேன் பயப்படாதே’.. 16 மணிநேரத்துக்கும் மேல் தொடரும் மீட்பு போராட்டம்' #SaveSujith பிரார்த்திக்கும் தமிழகம்..!
- 'தீபாவளிக்கு அடுத்த நாள் விடுமுறை'.. தமிழக அரசு 'அறிவிப்பு!'.. குதூகல சரவெடியில் குழந்தைகள்!
- 'என்னாது இவங்க இப்ப கலெக்டர் இல்லயா?'..மாறிய அதிகாரிகள்.. எங்க. எந்த கலெக்டர்.. விபரம் உள்ளே!
- "24 மணி நேரம், 7 நாள்.. 'இது' ஓகே, ஆனா 'இது' கூடாது".. தமிழக அரசின் புதிய அரசாணை!
- 60 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுமி... 3 நாட்களாக சிறுமியை மீட்கப் போராட்டம்!