தமிழ்நாட்டில் ஊரடங்கு நீட்டிப்பு.. எந்தெந்த கடைகளுக்கு என்னென்ன கட்டுப்பாடுகள்..?
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழ்நாட்டில் கொரோனா நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் புதிய கட்டுப்பாடுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
அதன்படி, உருமாறிய கொரோனா ஒமைக்ரான் வைரஸ் பரவலை கருத்தில் கொண்டும் மற்றும் பொது மக்கள் நலன் கருதி நடைமுறையில் உள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகள் 10.1.2022 வரை நீட்டித்து உத்தரவிடப்படுகிறது.
பண்டிகைக் காலங்களில் பொதுமக்கள் ஒரே நேரத்தில், ஒரே இடத்தில் கூடுவதால் கொரோனா நோய்த் தொற்று பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். அதனை கருத்தில் கொண்டு பொது மக்கள் நலன் கருதி கீழ்க்கண்ட கட்டுப்பாடுகளை விதிக்கப்பட்டுள்ளன.
1. உணவகங்கள், விடுதிகள், அடுமணைகள், தங்கும் விடுதிகள் மற்றும் உறைவிடங்களில் 50% வாடிக்கையாளர்கள் மட்டும் அமர்ந்து உணவு அருந்த அனுமதிக்கப்படும்.
2. துணிக்கடைகள் மற்றும் நகைக்கடைகளில் ஒரு நேரத்தில் 50% வாடிக்கையாளர்களுக்கு மிகாமல் செயல்படுவதை கடை உரிமையாளர்கள் உறுதி செய்ய வேண்டும்.
3. அழகு நிலையங்கள், சலூன்கள் (Beauty Parlour, Salons and Spas) ஒரு நேரத்தில் 50% வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.
4. உடற்பயிற்சி கூடங்கள் மற்றும் யோகா பயிற்சி நிலையங்கள் ஒரு நேரத்தில் 50% வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.
5. கேளிக்கை விடுதிகளில் உள்ள உடற்பயிற்சி கூடங்கள், விளையாட்டுக்கள், உணவகங்கள் ஒரு நேரத்தில் 50% வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- வேகம் எடுக்கும் கொரோனா.. நெருக்கடியில் சென்னை.. தனிமைப்படுத்தப்படும் தெருக்கள்
- டெல்டா வகையை விட ‘ஒமைக்ரான்’ அதிக பாதிப்பு ஏற்படுத்துமா..? இங்கிலாந்தில் நடந்த ஆய்வில் வெளியான ‘புதிய’ தகவல்..!
- புது கொரோனா ரகங்கள்: 6 மாசத்துக்கு ஒரு முறை பூஸ்டர் தடுப்பூசி போட்டுகிட்டு வாழ்ற நிலை வரலாம்..!
- 'பூஸ்டர்' டோஸ்களால் 'கொரோனாவ' கட்டுப்படுத்த முடியுமா...? - WHO இயக்குனர் அளித்த பதில்...!
- மறுபடியும் கோரத்தாண்டவமாடும் கொரோனா.. ஒரே நாளில் 1 லட்சம் பேருக்கு கொரோனா.. ‘140 பேர் பலி’.. விழி பிதுங்கி நிற்கும் நாடு..!
- அச்சுறுத்தும் ஓமிக்ரோன்.. ‘ஆதாரம் கிடைச்சிருக்கு’.. தடுப்பூசி போட்டவங்களும் எச்சரிக்கையாக இருக்கணும்.. WHO தலைவர் முக்கிய தகவல்..!
- ஓமிக்ரோன் பாதித்த நைஜீரியருடன் தொடர்பில் இருந்த 7 பேருக்கும் கொரோனா உறுதி.. சுகாதாரத்துறை செயலாளர்..!
- எங்க தடுப்பூசி 'ஓமிக்ரான்' வைரஸ் கூட 'நின்னு' மோதும்...! - 'தடுப்பூசி' நிறுவன அதிகாரி தகவல்...!
- இதை பண்றதால மட்டும் ‘ஓமிக்ரான்’ வைரஸ் பரவலை தடுத்திட முடியாது.. உலக சுகாதார அமைப்பு கொடுத்த எச்சரிக்கை..!
- ரொம்ப ஆபத்தான 'ஓமிக்ரான்' வைரஸ்...! '32 தடவ உருமாற்றம் அடைஞ்சிருக்கு...' இதை கண்டுபிடிக்க 'என்ன' வழி...? - 'அதிர' வைக்கும் தகவல்கள்...!