அதிகரித்து வரும் 'கொரோனா' தொற்று... 'இரவு' நேர ஊரடங்குடன், கடுமையான பல 'புதிய' கட்டுப்பாடுகள்... அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டது தமிழக அரசு!!!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கடந்த ஆண்டு பரவ ஆரம்பித்த கொரோனா தொற்று, தற்போது உருமாறிய வைரசாக நாட்டின் அனைத்து பகுதிகளையும் தாக்க துவங்கியிருக்கிறது.

இந்த கொடிய தொற்றின் பரவலைக் கட்டுப்படுத்த வேண்டி, மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் சில முக்கிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது.

இதன் முதற்கட்டமாக, தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும், ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல் படுத்தப்படவுள்ளது.

முழு ஊரடங்கு அமலில் இருக்கும் ஞாயிற்றுக்கிழமையின் போது, காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும், நண்பகல் 12 மணி முதல் 3 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் பார்சல் சேவை மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.

தகவல் தொழில்நுட்பம் மற்றும் அதன் சேவை நிறுவனங்களில், 50 சதவீத ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அந்தந்த நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதே போல, ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை, இரவு நேர ஊரடங்கு (இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை) அமல்படுத்தப்படும். இந்த இரவு நேர ஊரடங்கின் போது, தனியார் மற்றும் பொது போக்குவரத்து, ஆட்டோ மற்றும் டாக்ஸி ஆகியவற்றிற்க்கு அனுமதி இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது. மருத்துவம் போன்ற அவசர தேவைக்கு ஆட்டோ மற்றும் டாக்ஸி ஆகியவை பயன்படுத்தலாம்.

மேலும், அத்தியாவசிய பொருட்கள் தயாரிக்கும் ஆலைகள் இரவு நேர ஊரடங்கில் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதே போல, பெட்ரோல் மற்றும் டீசல் பங்குகளும் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த இரவு நேர ஊரடங்கில், பத்திரிக்கை மற்றும் ஊடகத் துறையினர் செயல்படலாம்.

மேலும், சுற்றுலா தலங்கள் மற்றும் கடற்கரை பகுதிகளுக்கு அனைத்து நாட்களும் பொது மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

கல்லூரி மற்றும் பல்கலைக்கழக தேர்வுகள், இணைய வழியே நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்காக தற்போது நடத்தப்பட்டு வரும் செயல்முறைத் தேர்வு மட்டும் திட்டமிட்டபடி நடைபெறும்.

தமிழக அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை சரிவர பொது மக்கள் பின்பற்ற வேண்டும் என்றும், இல்லாவிடில் மீறும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்