'வடபழனி கோவிலுக்கு சொந்தமான ரூ.250 கோடி சொத்து'... அமைச்சர் சேகர்பாபு அதிரடி!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான இடத்தை யார் ஆக்கிரமிப்பு செய்தாலும் சட்டம் தன் கடமையைச் செய்யும் என்று அமைச்சர் சேகர்பாபு கூறினார்.

சென்னை சாலிகிராமத்தில், வடபழனி முருகன் கோயிலுக்குச் சொந்தமான ரூ.250 கோடி மதிப்புள்ள 5.5 ஏக்கர் நிலத்தைத் தனியார் ஆக்கிரமிப்பிலிருந்து அறநிலையத்துறை மீட்டுள்ளது, அதற்கான பணிகளைப் பார்வையிட்ட அமைச்சர் சேகர்பாபு, கோயில் நிலத்தை யார் ஆக்கிரமித்திருந்தாலும் நடவடிக்கை உறுதி எனக் குறிப்பிட்டார். விரைவில் தமிழில் அர்ச்சனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

இதுகுறித்து பேசிய அமைச்சர் சேகர் பாபு, ''நீண்ட காலமாகக் கோயில் நிலங்களைத் தனியார்கள் யாரும் எடுத்துக்கொள்ள உரிமை கொண்டாட இந்து சமய அறநிலையத்துறை அனுமதிக்காது. ஆனால், மக்கள் நலன் கருதி அவர் நீண்ட காலம் இருந்தால், அந்த நிலம் வேறு பயன்பாட்டுக்கு இல்லை எனக் கருதினால் அவர்களுக்கே அதை வாடகைக்கு, நன்றாகக் கவனியுங்கள் அவர்கள் உரிமையாக்கிக் கொள்ள அல்ல, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் வாடகைக்கு விடப்படும். இந்து சமய அறநிலையத்துறைதான் அதை நிர்வகிக்கும்” என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

மேலும் கைப்பற்றப்பட்டுள்ள இந்த இடத்தை ஏழை எளிய மக்கள் பயன்படுத்தும் விதத்தில் சமுதாய நோக்கத்தோடு பயன்படுத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதேபோன்று அனைவரும் கலந்தாலோசித்து, இந்த இடத்தில் எது வந்தால், ஏழை மக்கள், அடித்தட்டு மக்கள், வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ளவர்கள் பொருளாதாரத்தில் மேம்பட உண்டான திட்டம் நிச்சயம் செயல்படும். அதற்கான அறிவிப்பை முதல்வர் வெளியிடுவார் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்