”பெரும் எதிர்பார்ப்புக்கு பிறகு... அரசின் ’அதிரடி’ அறிவிப்பால்... குஷியான மாணவர்கள்!’ ...’பெருமூச்சு விடும் பெற்றோர்கள்!”

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கொரோனா காரணமாக இந்த வருடம் முழுவதும் பள்ளிகள் திறக்கவில்லை. இதனால் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. ஆனால் 10-ஆம் வகுப்பிலிருந்து 11-ஆம் வகுப்பிற்கு மாணவர்களை எப்படி சேர்க்கலாம் என்று அரசு அலசிக்கொண்டு இருந்தது. மாணவர்களுக்கு நுழைவு தேர்வு நடத்தலாம் என்று அரசு முடிவெடுத்தது. ஆனால் நுழைவு தேர்வு நடத்த கடும் எதிர்ப்பு வந்தது. எல்லா தேர்வும் ரத்து செய்யப்பட்டுள்ளது பிறகு இந்த தேர்வு மட்டும் எதற்கு என்ற கேள்வியும் எழுந்தது.

எனவே, 2021-2022 கல்வியாண்டில் 11-ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை குறித்து வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டது தற்போது அதில் சிறு மாற்றம் செய்யப்பட்டு அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது.

தற்போது அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் மேல்நிலை பிரிவுகளில் ஏற்கனவே சேர்க்கப்படும் மாணவர்கள்  எண்ணிக்கைக்கு உட்பட்டு மாணவர்கள் சேர விருப்பம் தெரிவிக்கும் நிலையில் அவரது விருப்பத்திற்கேற்ப பாடப்பிரிவுகளை ஒதுக்கீடு செய்யலாம்

அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் அனுமதிக்கப்பட்டுள்ள இடங்களுக்கு மேல் மாணவர்கள் விண்ணப்பித்தால் கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக ஒவ்வொரு பிரிவிலும் 10 முதல் 15 சதவீத கூடுதலாக மாணவர் சேர்க்கை நடத்திடலாம். மிக அதிகப்படியான விண்ணப்பங்கள் குறிப்பட்ட பிரிவுகளுக்கு வரும் சூழலில் அதற்கான விண்ணப்ப மாணவர்களின்  ஒன்பதாம் வகுப்பு மதிப்பெண்களை அடிப்படையாக கொண்டு மாணவர்களின் விருப்பத்தின்படி பிரிவுகளை ஒதுக்கீடு செய்யலாம்

11ஆம் வகுப்பு சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கு ஜூன் மூன்றாவது வாரத்தில் அப்போது கோவிட் -19 பெருந்தொற்று குறித்து அரசின் வழிகாட்டுதல் அடிப்படையில் வகுப்புகளை தூவங்கலாம் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்