‘வீட்டில் என்னை தனிமைப்படுத்திக் கொண்டேன்’!.. முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு கொரோனா.. ட்விட்டரில் ஒரு வேண்டுகோள்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

முன்னாள் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் நோய் தொற்றை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிகைகளை மேற்கொண்டு வருகின்றன. மேலும் தடுப்பூசி செலுத்தும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர்.விஜயபாஸ்கருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் இவர் விராலிமலை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிப் பெற்றார். தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்த விஜயபாஸ்கருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அதனால் தான் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்த அவர், ‘பொதுச் சுகாதார ஆய்வகத்தில் பரிசோதனை மேற்கொண்டதில், எனக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பரிசோதனைக்கு பிறகு என்னை நான் தனிமைப்படுத்திக் கொண்டேன். என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் பரிசோதனை செய்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். கொரோனா விதிமுறைகளைப் பின்பற்றி பாதுகாப்பாக இருங்கள்’ என மக்களுக்கு டாக்டர்.விஜயபாஸ்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்