'தமிழகத்திலேயே முதல் முறையாக'.. திருநங்கை திருமணத்துக்கு கிடைத்த அங்கீகாரம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழ்நாட்டில் முதல்முறையாக சட்ட ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட திருநங்கையின் திருமணத்துக்கு தூத்துக்குடி சார்பதிவாளர் அலுவலகம் சான்றிதழ் கொடுத்துள்ளது.
தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்துவரும் தூத்துக்குடி சங்கரபேரியைச் சேர்ந்த அருண்குமார் என்பவர், அதே தூத்துக்குடியின் ஹவுசிங் போர்டு காலனியைச் சேர்ந்தவரும், மகளிர் கல்லூரி ஒன்றில் இளங்கலை ஆங்கிலம் 2-ஆம் ஆண்டு படித்து வருபவருமான திருநங்கை ஸ்ரீஜா என்பவரை காதலித்து, கடந்த வருடம் அக்டோபர் மாதம் 31-ஆம் நாள் கோவிலில் வைத்து திருமணம் செய்துகொண்டார்.
ஆனால், அப்போது இவர்களின் திருமணத்துக்கு பதிவுச் சான்றிதழ் வழங்கவியலாது என சார்பதிவாளர் கூறியதாகத் தெரிகிறது. இதனைத்தொடர்ந்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அருண்குமார்-ஸ்ரீஜா தம்பதியர் கோரிய மனுவில் தங்களுக்கு பதிவுச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரியிருந்தனர்.
இதன் பின்னர் இருவருக்குமான திருமண பதிவுச் சான்றுக்கான ரசீது வழங்கப்பட்டு, சப்ரிஜிஸ்டார் அலுவலர்கள் முன்னிலையில், இந்த தம்பதியர் மீண்டும் மோதிரம் மாற்றி, மாலை மாற்றி தங்கள் திருமணத்தை ரிஜிஸ்டர் செய்துள்ளனர். இவர்களுக்கு முதன்முதலில் சார்பதிவாளர் அலுவலகம் அங்கீகரிக்கப்பட்ட திருமணத்துக்கான பதிவுச் சான்றிதழை வழங்கியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'அக்னி வெயில் குறையுமா'?... வானிலை மையம் புதிய அறிவிப்பு!
- ‘ப்ளீஸ் இத பண்ண வேண்டாமே’..நிலவும் கடும் தண்ணீர் தட்டுப்பாடு.. வேண்டுகோள் வைத்த சென்னை குடிநீர் வாரியம்!
- நள்ளிரவில் ஆபத்தில் இருந்த தமிழ்ப்பெண்.. சைரனை அலறவிட்டு காப்பாற்றிய கேரள ஆம்புலன்ஸ் டிரைவர்!
- 'இப்ப இதுக்கும் டூப்ளிகேட் வந்துருச்சா'.. சிக்கிய ஃபாரின் கும்பல்.. மிரளவைக்கும் தகவல்கள்!
- “தமிழகத்தில் மறுவாக்குப்பதிவா? ஏப்ரல் 18 ல் நடைபெற்ற தேர்தலில் குளறுபடியா”?... தேர்தல் அதிகாரி கூறும் பதில் என்ன?
- 'அவன போக சொல்லுயா..'.. ‘நான் மாற்றுத்திறனாளி சார்’.. ‘அதுக்கு?’.. கிரிக்கெட் ரசிகரின் வருத்தமான போஸ்ட்!
- ப்ளஸ் 1 பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு.. எந்த மாவட்டம் முதலிடம்?
- “தென்னிந்திய திருடர் குல திருவிழா”!... என்னடா இது புதுசா இருக்கு!
- ப்ளஸ் 1 தேர்வு முடிவுகள் எப்போது வெளியீடு?.. எந்த இணையதளங்களில் பார்க்கலாம்!
- ‘3 புள்ளைக்கும் சொத்த கொடுத்துட்டு’.. ‘ஒருவேளை சாப்பாட்டுக்கு, படுக்க இடமில்லாம அனாதையா சுத்துரேன்’ முதியவர் உருக்கம்!