"வேட்டையாடும் வம்சம்டா".. 'ஒரு டஜன் நாய்களுடன் முயல் வேட்டை'.. 'டிக்டாக்' வீடியோவால் சிக்கிய இளைஞர்கள்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலை அடுத்த பாண்டியாபுரம் பகுதியில் உள்ள 3 இளைஞர்கள் சேர்ந்து ஒரு டஜன் வேட்டை நாய்களுடன் முயல் வேட்டைக்குச் சென்றுள்ளனர்.
அங்கு இவர்களைக் கண்டதும் சாமர்த்தியமாக தங்களைக் காப்பாற்றிக்கொள்ள புதரில் பதுங்கிய முயல் ஒன்றை வேட்டை நாயை ஏவி, பிடித்து வரக் கட்டளையிட்ட இந்த இளைஞர்கள், தங்கள் வேட்டை நாயை வைத்து முயலை வேட்டையாடுவதை வீடியோ எடுத்து, டிக்டாக்கிலும் கெத்தாக பதிவிட்டுள்ளனர்.
அந்த வீடியோவை, “வேட்டையாடும் வம்சம்டா” என்கிற அடைமொழியுடன் பகிர்ந்துள்ளனர். இந்த வீடியோ வனத்துறையினரின் கையில் சிக்கியதும், முயல் வேட்டைக்கு நாயை ஏவிய 3 இளைஞர்களையும் பிடித்ததோடு, ஆதாரத்துடன் சிக்கியதால் மூவருக்கும் தலா 25 ஆயிரம் ரூபாய் வீதம் 75 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.
அதுமட்டுமல்லாமல், பின்னர் அந்த வேட்டையாடும் வம்ச வாரிசுகளின் வாயாலேயே, அவர்கள் செய்த செயலையும், அந்த தவறை உணர்வதாகவும் கூறவைத்து வனத்துறையினர் வீடியோ எடுத்து பதிவிட்டுள்ளனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- யாராவது 'ஹெல்ப்' பண்ணுங்க பிளீஸ்... நடுரோட்டில் 'பதறிய' இளைஞர்... பொதுமக்களுக்கு 'காத்திருந்த' அதிர்ச்சி!
- ‘வவ்வால்களை பாதுகாப்போம்’.. மாஸ்க் கொடுத்து விநோத விழிப்புணர்வு.. என்ன காரணம்..?
- தமிழகத்தில் 'பள்ளிகள்' திறப்பு... மேலும் 'தள்ளிப்போக' வாய்ப்பு... என்ன காரணம்?
- "என் புருஷன கடைசியா ஒரு தடவ பாக்கணும்"... 2000 'கி.மீ' தொலைவில்... உயிரிழந்த "கணவர்"... கலெக்டர் செய்த உதவி!
- 'மக்களுக்கு ஒரு நல்ல செய்தி'...'துபாயிலிருந்து வந்தவருக்கு குணமாயிடுச்சு'... ஆட்சியர் வெளியிட்ட தகவல்!
- ‘1 மணிக்கு மேல வெளியே வரவேண்டாம்’.. ‘2கிமீ-க்கு மேல போகக்கூடாது’.. ‘ஊரடங்கில் 3 முக்கிய ரூல்ஸ்’.. நெல்லை போலீஸார் அதிரடி..!
- 81 பேருடன் 'சென்னை முதலிடம்'... மாவட்ட வாரியாக வெளியான 'கொரோனா' பட்டியல்
- 'தமிழகத்தில்' 18 ஆக உயர்ந்த கொரோனா தொற்று... 'எந்த' மாவட்டத்தில் பாதிப்பு அதிகம்... அவர்களின் 'தற்போதைய' நிலை என்ன?
- தமிழகத்தில் கொரோனா பரவிய 'முதல்' நபர்... இந்த '10 மாவட்டங்களில்' பாதிப்பு அதிகம்: அமைச்சர் விஜயபாஸ்கர்
- இன்று முதல் 'தமிழ்நாட்டில்' 144 தடையுத்தரவு... இதெல்லாம் 'கண்டிப்பா' செய்யவே கூடாது... முழு விவரம் உள்ளே!