வாக்குப்பதிவு செய்யப்பட்ட EVM இயந்திரங்கள் எங்கே?.. 'shift' போட்டு வேலை செய்யும் அரசியல் கட்சிகள்!.. மே 2 வரை தமிழகத்தின் நிலை 'இது' தான்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு, 24 மணி நேரமும் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழக சட்டமன்ற தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்கு எந்திரங்கள், அந்தந்த மாவட்டங்களின், வாக்கு எண்ணிக்கை மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இதற்காக தமிழகம் முழுவதும் 75 வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
சென்னையில் 16 தொகுதிகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம், லயோலா கல்லூரி மற்றும் மெரினா கடற்கரை சாலையில் உள்ள ராணி மேரி கல்லூரி ஆகிய 3 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டுள்ளன.
அங்கு மூன்று வேலை நேரங்களாக சுழற்சி அடிப்படையில் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவ படையினர் மற்றும் காவல்துறையினர் மூன்று அடுக்கு பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூன்று மையங்களிலும் தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
மேலும், அனைத்து கட்சிகளின் நம்பக தன்மைக்காக கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒரு முறை சிசிடிவி வேலை செய்கிறதா என தேர்தல் அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது.
அறையின் முன்பாக மத்திய தொழிற் பாதுகாப்பு படையினரும், நுழைவு வாயிலில் சட்டம் ஒழுங்கு காவல் துறையினரும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஒரு கட்சியில் 3 முகவர் வீதம் அனைத்து கட்சியினருக்கும் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. சுழற்சி முறையில் அவர்கள் பணியில் ஈடுபடுவர் என்றும் கூறப்பட்டுள்ளது. மாவட்ட தேர்தல் அதிகாரி முன்னிலையில் மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையானது சீல் வைக்கபட்டது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘வண்டியை நிறுத்துங்க..!’.. வாக்குப்பதிவு இயந்திரத்தை ‘பைக்கில்’ எடுத்துச் சென்ற இருவர்.. சுற்றி வளைத்த மக்கள்.. வேளச்சேரியில் பரபரப்பு..!
- 'எதுக்கு எங்க அம்மா பெயரை இழுத்தீங்க'... 'விஸ்வரூபம் எடுக்கும் பிரச்சனை'... உதயநிதிக்கு தேர்தல் ஆணையம் விதித்துள்ள கெடு!
- விறுவிறு வாக்குப்பதிவுக்கு இடையே... 2 முறை i-pac அலுவலகத்துக்கு விசிட் அடித்த ஸ்டாலின்!.. பின்னணி என்ன?
- 'தேர்தல் நேரத்துல உதயநிதி இப்படி செஞ்சது நியாயமா'?... 'கொந்தளித்த அதிமுக'... தேர்தல் ஆணையத்திடம் முறையீடு!
- 'நான் ஒருத்தன் தான் கத்திக்கிட்டே இருக்கேன்'... 'இது ஜப்பான்ல கூட இல்ல'... 'ஆனா இங்க என்னமோ நடக்குது'... சீமான் வைத்த பரபரப்பு குற்றச்சாட்டு!
- VIDEO: ‘செல்ஃபி எடுத்த ரசிகரின் செல்போனை பறித்த அஜித்’!.. அதன்பின்னர் என்ன நடந்தது..? வெளியான ‘புதிய’ வீடியோ..!
- 'இந்த தேர்தல் மட்டும் இல்ல'...'எனது நிலைப்பாடு என்ன'?... வாக்களித்த பின்பு நடிகர் விஜய் சேதுபதி அதிரடி!
- 'ஓடியாங்க... ஓடியாங்க... இங்க வந்து பாருங்க'!.. ஓட்டு போட்ட பின்... வாக்குச்சாவடியில் அலறிய வாக்காளர்கள்... வாக்குப்பதிவை நிறுத்திய அதிகாரிகள்!
- வாக்காளர் அட்டை இல்லையா..? ‘கவலையே வேண்டாம்’. இந்த 11 ஆவணத்துல ஒன்னு இருந்தா கூட போதும்.. தேர்தல் ஆணையம் முக்கிய தகவல்..!
- 'சென்னையில் பரபரப்பு'... 'ஓட்டு போட போனவருக்கு காத்திருந்த அதிர்ச்சி'... 'சர்க்கார் படத்தை நிஜமாக்கிய சம்பவம்'... கடைசியில் நடந்த ட்விஸ்ட்!