சென்னையில் கால் பதித்த பாஜக.. கவுன்சிலர் ஆகிறார் உமா ஆனந்த்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகத்தில் 1,374 மாநகராட்சி உறுப்பினர்கள், 3,843 நகராட்சி உறுப்பினர், 7,621 பேரூராட்சி உறுப்பினர் பதவிகள் என மொத்தமாக 12,838 பதவிகளுக்கு கடந்த 19 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது.

Advertising
>
Advertising

கட்டியணைக்க வந்த வீரருக்கு கன்னத்தில் விழுந்த அறை..பாகிஸ்தான் வீரரின் பளார் கோபம்.. வைரல் வீடியோ..!

தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 61 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.முறைகேடு புகார் காரணமாக சென்னை உள்பட 4 மாவட்டங்களில் 7 வாக்குச்சாவடிகளில் நேற்று மறு வாக்குப்பதிவு நடந்தது. இன்று காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. தமிழகம் முழுவதும் 279 மையங்களில் ஓட்டு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

தேர்தல் நிலவரம்

இன்று காலை வாக்கு எண்ணிக்கை துவங்கியதில் இருந்தே திமுக பெரும்பாலான இடங்களில் முன்னிலை பெற்று வருகிறது. ஏற்கனவே தனக்கு செல்வாக்கு இருக்கும் இடங்கள் மட்டுமல்லாது அதிமுக கோட்டை  அழைக்கப்படும் கோவை, கோபிச்செட்டி பாளையம் ஆகியவற்றிலும் திமுக வெற்றி பெற்று இருப்பது அந்தக் கட்சியினரை மகிழ்ச்சி பெற வைத்திருக்கிறது.

இந்த உள்ளாட்சி தேர்தலில் பாஜக கட்சியினர் சிலரும் வெற்றி பெற்றனர். அதுமட்டுமல்லாது, திமுகவின் கோட்டை என்று அழைக்கப்படும் சென்னையில் பாஜக முதல் முறையாக கால் பதித்திருக்கிறது .

கால் ஊன்றிய பாஜக

சென்னை மாநகராட்சியின் கோடம்பாக்கம் மண்டலத்தின் 134-வது வார்டில் பாஜக சார்பாக போட்டியிட்டவர் உமா ஆனந்தன். அதிமுக சார்பில் அனுராதா பாலாஜியும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சுசீலா கோபாலகிருஷ்ணனும் போட்டியிட்டார்கள்.

இதில், பாஜக வேட்பாளர் உமா ஆனந்தன் காங்கிரஸ் வேட்பாளரை விட 2036 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். உமா ஆனந்தன் 5539 வாக்கும், காங்கிரஸ் வேட்பாளர் 3503 வாக்குகளும், அதிமுக 2695 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

உமா ஆனந்த்

தன்னை கோட்ஸே ஆதரவாளர் என அறிவித்துக்கொண்ட உமா ஆனந்த் சென்னையில் வெற்றி பெற்று கவுன்சிலர் ஆகி இருப்பது தான் இப்போதைய டாக் ஆப் தி டவுன். பொன்னாடை போர்த்துதல், கோட்ஸே விவகாரத்தில் உமா ஆனந்த் வெளியிட்ட கருத்துகள் சமூக வலைத்தளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

சுரங்கத்துல வாக் போனப்போ.. செங்கல் சூலை வியாபாரிக்கு கிடைத்த பொக்கிஷம்.. மனுஷன் இப்போ கோடீஸ்வரன்..!

TAMILNADU ELECTION RESULTS, BJP MEMBER, VICTORY IN CHENNAI, பாஜக, சென்னை, கவுன்சிலர், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்