மறுபடியும் கைகொடுத்த ‘கொங்கு’ மண்டலம்.. இங்க மட்டும் அதிமுக ‘டாப்’ கியர்ல இருக்கே..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கொங்கு மண்டலத்தில் பெரும்பான்மையான இடங்களில் அதிமுக முன்னிலை வகித்து வருகிறது.

மறுபடியும் கைகொடுத்த ‘கொங்கு’ மண்டலம்.. இங்க மட்டும் அதிமுக ‘டாப்’ கியர்ல இருக்கே..!

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை பணி மும்முறமாக நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி திமுக 146 இடங்களிலும், அதிமுக 87 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றன. அதில் மற்ற பகுதிகளை விட வழக்கம்போல கொங்கு மண்டத்தில் இந்தமுறையும் அதிமுக  பெரும்பான்மையான இடங்களில் முன்னிலை வகிக்கின்றன.

TN Election Results 2021: Coimbatore constituency AIADMK leading

கோவை மாவட்டத்தை பொறுத்தவரை சிங்காநல்லூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, வால்பாறை, சூலூர், கவுண்டம்பாளையம், கோவை வடக்கு, தொண்டாமுத்தூர் ஆகிய 8 தொகுதிகளில் அதிமுக முன்னிலை வகித்து வருகிறது. மேட்டுப்பாளையத்தில் திமுகவும், கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சியும் முன்னிலை வகிக்கிறது.

TN Election Results 2021: Coimbatore constituency AIADMK leading

திருப்பூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம், அவிநாசி, திருப்பூர் வடக்கு, பல்லடம் ஆகிய தொகுதிகளில் அதிமுக முன்னிலை வகித்து வருகிறது. காங்கேயம் மற்றும் திருப்பூர் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் திமுக முன்னிலை வகிக்கிறது.

ஈரோடு மாவட்டத்தைப் பொறுத்தவரை கோபி, பவானிசாகர், பெருந்துறை, பவானி தொகுதிகளில் அதிமுகவும், ஈரோடு மேற்கு மற்றும் அந்தியூரில் திமுகவும், ஈரோடு கிழக்கில் காங்கிரஸ் மற்றும் மொடக்குறிச்சியில் பாஜக முன்னிலை வகித்து வருகின்றன.

நாமக்கல் மாவட்டத்தைப் பொறுத்தவரை ராசிபுரம், பரமத்தி வேலூர், குமாரபாளையம் தொகுதிகளில் அதிமுகவும், சேந்தமங்கலம், நாமக்கல், திருச்செங்கோடு தொகுதியில் திமுகவும் முன்னிலை வகித்து வருகிறது.

சேலம் மாவட்டத்தைப் பொறுத்தவரை, சேலம் தெற்கு, வீரபாண்டி, கெங்கவல்லி, ஆத்தூர், ஏற்காடு, ஓமலூர், எடப்பாடி தொகுதிகளில் அதிமுகவும், சேலம் மேற்கு மற்றும் மேட்டூரில் பாமகவும், சங்ககிரி, சேலம் வடக்கு தொகுதிகளில் திமுகவும் முன்னிலை வகிக்கிறது.

கரூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம், குளித்தலை ஆகிய தொகுதிகளில் திமுக முன்னிலையில் உள்ளது. கரூர் தொகுதியில் திமுக மற்றும் அதிமுக மாறி மாறி முன்னிலை வகித்து வருகின்றன.

திண்டுக்கல் மாவட்டத்தில் பழனி, ஒட்டன்சத்திரம், ஆத்தூரில் திமுகவும், நிலக்கோட்டை, நத்தம், திண்டுக்கல் தொகுதியில் அதிமுகவும் முன்னிலை வகிக்கின்றன.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்