'நான் தேர்தல்ல நிக்க போறேன்!.. ஓட்டுக்கு பணம் கொடுக்கணும்ல... அதுக்கு Loan கொடுங்க'!.. வேர்த்து விறுவிறுத்துப் போன வங்கி அதிகாரி!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நாமக்கல்லில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க வங்கியில் 46 கோடி ரூபாய் கடன் கேட்ட சுயேட்சை வேட்பாளரின் செயலால் வங்கி மேலாளர் அதிர்ச்சியடைந்தார்.
தமிழகம் முழுவதும் வருகின்ற ஏப்ரல் 6-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், நாமக்கல் சட்டப்பேரவைத் தொகுதியில் அஹிம்சா சோசியலிஸ்ட் கட்சியின் சார்பில் ரமேஷ் என்பவர் போட்டியிடுகிறார்.
இந்நிலையில், இன்று அவர், காந்தி வேடம் அணிந்து தனது சின்னமான கிரிக்கெட் பேட் மற்றும் ஹெல்மெட்டுடன் நாமக்கல் டாக்டர் சங்கரன் சாலையில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கிக்கு சென்று வங்கி மேலாளரிடம் மனு ஒன்றை அளித்தார்.
அந்த மனுவில், "விஜய் மல்லையா உள்ளிட்டோரின் 68 ஆயிரம் கோடி ரூபாய் கடன் தொகையை எஸ்.பி.ஐ வங்கி தள்ளுபடி செய்துள்ளது. அதேபோல், நாமக்கல் தொகுதியில் உள்ள 2 லட்சத்து 30 ஆயிரம் வாக்காளர்களுக்கு 100 சதவீத வாக்களிப்பை உறுதி செய்யும் வகையிலும்,
வாக்காளர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் ஊக்க தொகையாக வழங்க நாமக்கல் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் தமக்கு வெறும் 46 கோடி ரூபாய் மட்டும் மானியத்துடன் கடன் வழங்க வேண்டும் எனவும், அதனை தன்னுடைய வாக்காளர் அடையாள அட்டையை வைத்து வழங்கவேண்டும் எனவும் அதில் குறிப்பிட்டிருந்தார்.
அந்த மனுவை வாங்கிப் படித்த வங்கி மேலாளர் அதிர்ச்சியடைந்தார். பிறகு, உயர் அதிகாரிகளிடம் இதுகுறித்து ஆலோசனை நடத்தி அந்த மனுவை பரிசீலனை செய்வதாக வங்கி மேலாளர் தெரிவித்தார். வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க வங்கியில் கடன் கேட்ட வேட்பாளரால் நாமக்கல்லில் பரபரப்பு ஏற்பட்டது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'நெருங்கும் சட்டமன்ற தேர்தல்'... முதல்வரின் அடுத்தகட்ட சூறாவளி சுற்றுப்பயணத் திட்டம்!
- 'மண்வெட்டி பிடிச்ச கை இது...' 'எதுக்கும் பயப்பட மாட்டேன்...' 'விவசாயிகளுக்காக வந்த ஒரே முதல்வர் நான் தான், அதுக்கு காரணம்...' - தமிழக முதல்வர் அதிரடி பேச்சு...!
- 'சொல்லி 24 மணி நேரம் கூட ஆகல...' 'அதுக்குள்ள எடுத்த முடிவுல மிகப்பெரிய சேஞ்ச்...' - மாஸாக வந்து மன்சூர் அலிகான் சொன்ன கபாலி பஞ்ச் டயாலக்...!
- "தடையில்லா மின்சாரம் வழங்கியது அதிமுக அரசு!".. தேர்தல் பரப்புரையில் முதல்வர் பழனிசாமி பேச்சு!
- ‘ஸ்டாலினை அவரது தந்தையே நம்பவில்லை’!.. ‘அப்புறம் நாட்டு மக்கள் எப்படி நம்புவார்கள்’.. முதல்வர் பழனிசாமி விமர்சனம்..!
- 'யார் இளைஞர்களுக்கு அதிகம் வேலை கொடுத்தது'?... 'விவரங்களுடன் பட்டியல் போட்ட முதல்வர்'... தேர்தல் பிரச்சாரத்தில் அதிரடி!
- 'வீடு ரொம்ப பழசா இருக்குதேன்னு வருத்தப்படாதீங்க...' 'தமிழக முதல்வர் அளித்த வாக்குறுதிகள்...' - எங்க ஆட்சியில மட்டும்தான் கரண்ட் கட் கிடையாது...!
- ‘மனசு வேதனையா இருக்கு’!.. ‘எங்கபோனாலும் இதையே கேட்குறாங்க’.. தேர்தலில் போட்டியிடவில்லை என அறிவித்த நடிகர் மன்சூர் அலிகான்..!
- அந்த நாட்டுல கரும்ப வச்சு 'அத' உற்பத்தி பண்றாங்களே...! 'அதே மாதிரி இங்கையும் பண்ணுவோம்...' - பரப்புரையில் சீமான் அதிரடி...!
- "இந்த ஒரு விஷயத்துக்காக... ஸ்டாலினுக்கு டாக்டர் பட்டம் கொடுக்கலாம்"!.. விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த முதல்வர் பழனிசாமி!