பரபரக்கும் தமிழக 'அரசியல்' களம்.. 'நெல்லை' சட்டமன்ற தொகுதியில் திடீரென நின்ற 'வாக்கு' எண்ணிக்கை.. நடந்தது என்ன??..

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகம் உட்பட 5 மாநிலங்களில், இன்று சட்டமன்ற  தேர்தல் வாக்கு எண்ணிக்கை மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அடுத்த ஆட்சியை அமைக்கப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு, அனைத்து மாநிலத்தின் மக்களுக்கு மத்தியிலும் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், தமிழகத்தின் திருநெல்வேலி சட்டமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை, கடந்த ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த தொகுதியில், ஒப்புகை சீட்டில் உள்ள எண்ணிற்கும், கன்ட்ரோல் யூனிட்டில் உள்ள எண்ணிற்கும் வித்தியாசம் இருப்பதாக கூறி, கடந்த ஒரு மணி நேரத்திற்கும் மேலாக, வாக்கு எண்ணிக்கை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக, அதிகாரிகள் தற்போது பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.


முன்னதாக, இந்த தொகுதியின் வாக்கு எண்ணிக்கை முடிவில், அதிமுக கூட்டணி சார்பில், பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன், திமுக வேட்பாளர் லட்சுமணனை விட, சுமார் 8,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்