'தமிழகத்தின் இன்றைய கொரோனா அப்டேட்...' எந்த மாவட்டங்கள் முதல் மற்றும் 2-வது இடம்...? - மேலும் முழு விவரங்கள்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் இன்று (28-09-2020) ஒரே நாளில் 5,589 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்படைந்த 5,589 பேரில் 5,577 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்றும், 12 பேர் வெளிநாடு மற்றும் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் என்று சுகாதாரத்துறை குறிப்பிட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் மொத்தம் கொரோனா பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 5,69,370 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 46,386 ஆக உள்ளது.
சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 1283 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,64,744 ஆக அதிகரித்துள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக அதிகப்பட்சமாக கோயம்பத்தூரில் 587 பேருக்கும், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டில் தலா 249 பேருக்கும் கொரோனா உறுதியாகி உள்ளது.
மேலும் தமிழகத்தில் இன்றைய தினம் 5,554 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 5,86,397 ஆக உயர்ந்துள்ளது.
உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையைப் பொருத்தவரை இன்றைய தினம் அரசு மருத்துவமனையில் 41 பேர், தனியார் மருத்துவமனையில் 29 பேர் என மொத்தம் 70 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், மொத்தமாக தற்போது வரை கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 9383 ஆக உயர்ந்துள்ளது.
இன்று ஒரு நாள் மட்டும் தமிழகத்தில் 78,614 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதாகவும், இதுவரை சுமார் 69,66,657 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை செய்தி வெளியிட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'தப்பான நட்பால வந்த அந்த பழக்கம்'... 'பிளைட் பிடிச்சு வந்து'... 'பாக்ஸிங் வீரர் ஊரில் பார்த்த வேலை'... 'வெளியான அதிரவைக்கும் பின்னணி!!!'...
- 'சென்னையில கொரோனா தடுப்பூசி பரிசோதனை ஸ்டார்ட் பண்ணிட்டாங்க...' '2 ஆஸ்பத்திரியில டெஸ்ட் நடக்குது...' - மக்களுக்கு எப்போது செலுத்தப்படும்...?
- 'தடுப்பூசி விவகாரத்தில்... புதிதாக சீனா கொடுத்துள்ள ஷாக்'... மக்களிடம் 'ரகசிய' ஒப்பந்தம்?... 'வெளியாகியுள்ள பகீர் செய்தி!!!'...
- கோவையில் மேலும் 596 பேருக்கு கொரோனா!.. சேலத்தில் வேகமெடுக்கிறது தொற்று!.. பிற மாவட்டங்களில் நிலவரம் என்ன?
- தமிழகத்தில் மேலும் 80 பேர் கொரோனாவுக்கு பலி!.. மீண்டும் சிக்கலில் சென்னை!.. முழு விவரம் உள்ளே
- 'இந்தியர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பு மருந்தா?... அதுக்கு எவ்வளவு செலவு ஆகும் தெரியுமா?'... சீரம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சரமாரி கேள்வி!
- கொரோனா பாதிப்பு... மருத்துவமனை சிகிச்சை... 'தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் நிலை எப்படி இருக்கு'?.. சுதீஷ் தகவல்!
- "கொரோனானு தான் கூட்டிட்டு போனாங்க"... 'இளம்பெண்ணை தேடியலைந்தபோது'... 'போலீசுக்கு வந்த ஒரு போன்'... 'அடுத்தடுத்து எவ்ளோ டிவிஸ்டு!!!'...
- “அடிச்சுது யோகம்!” - கொரோனா டயத்துல இப்படி ஒரு முடிவு எடுத்த அரசு.. ஊழியர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி!
- 'தமிழகத்தின் இன்றைய (26-09-2020) கொரோனா அப்டேட்'... 'சென்னையில் மட்டும் ஒரே நாளில்'... 'முழு விவரங்கள் உள்ளே!'...