'தமிழகத்தின் இன்றைய கொரோனா அப்டேட்...' எந்த மாவட்டங்கள் முதல் மற்றும் 2-வது இடம்...? - மேலும் முழு விவரங்கள்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் இன்று (25-09-2020) ஒரே நாளில் 5,679 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்படைந்த 5,679 பேரில் 5,671 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்றும், 8 பேர் வெளிநாடு மற்றும் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் என்று சுகாதாரத்துறை குறிப்பிட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் மொத்தம் கொரோனா பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 5,69,370 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 46,386 ஆக உள்ளது.
சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 1193 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,60,926 ஆக அதிகரித்துள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக அதிகப்பட்சமாக கோயம்பத்தூரில் 661 பேருக்கும், சேலத்தில் 297 பேருக்கும், செங்கல்பட்டில் 277 பேருக்கும் கொரோனா உறுதியாகி உள்ளது.
மேலும் தமிழகத்தில் இன்றைய தினம் 5,626 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 5,13,836 ஆக உயர்ந்துள்ளது.
உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையைப் பொருத்தவரை இன்றைய தினம் அரசு மருத்துவமனையில் 37 பேர், தனியார் மருத்துவமனையில் 35 பேர் என மொத்தம் 72 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், மொத்தமாக தற்போது வரை கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 9148 ஆக உயர்ந்துள்ளது.
இன்று ஒரு நாள் மட்டும் தமிழகத்தில் 93,002 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதாகவும், இதுவரை சுமார் 67,01,677 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை செய்தி வெளியிட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'அந்த ஒரு ஆசை மட்டும்'... 'லைஃப்ல நிறைவேறாமயே போயிடுச்சே'... 'எஸ்.பி.பி மறைவால் கலங்கிய'... 'தினேஷ் கார்த்திக் உருக்கமான பதிவு!'...
- 'கொரோனா தடுப்பு மருந்தா!?.. அது எங்க ஊரு மருந்து கடையிலயே கிடைக்கும்!'.. அதிர்ந்து போன உலக நாடுகள்!.. முடிகிறதா கொரோனாவின் சகாப்தம்?
- "இந்த 114 வருஷத்துல இப்படி நடக்குறது இதான் முதல் தடவை!"... கொரோனாவால் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு நேரும் பங்கம்?
- "6 நாளில்.. 11 லட்சத்து 36 ஆயிரம் கோடி!".. கொரோனாவால் மளமளவென சரிந்த முதலீடுகள்!!.. பெரும் சிக்கலில் முதலீட்டாளர்கள்!
- 'தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலையா?'. சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் சொல்வது என்ன?
- 'சென்னை மக்களுக்கு வெளியான ஹேப்பி நியூஸ்'... 'ஒரு ஏரியாகூட இப்போ அப்படி இல்ல'... 'மாநகராட்சி அதிகாரிகள் தகவல்!!!'...
- "இந்த தடுப்பூசிய ஒரு டைம் போட்டுகிட்டாலே போதும்... 60 ஆயிரம் பேர்கிட்ட பரிசோதனை!!!"... - 'பிரபல நிறுவனத்தின் நம்பிக்கை தரும் அறிவிப்பு!'...
- 'தமிழகத்தின் இன்றைய கொரோனா அப்டேட்...' எந்த மாவட்டங்கள் முதல் மற்றும் 2-வது இடம்...? - மேலும் முழு விவரங்கள்...!
- 'எங்க கொரோனா உருவாச்சுன்னு என்கிட்ட proof இருக்கு...' 'இத மறைக்க அவங்களும் துணை...' - சீன டாக்டர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்கள்...!
- 'வேணாம் சாமி, அந்த கதையே வேண்டாம்'...'இங்க போனாலே கொரோனா பாசிட்டிவ்'?... அச்சத்தில் மக்கள்!