'தமிழகத்தின் இன்றைய கொரோனா அப்டேட்...' எந்த மாவட்டங்கள் முதல் மற்றும் 2-வது இடம்...? - மேலும் முழு விவரங்கள்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் இன்று (24-09-2020) ஒரே நாளில் 5,692 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்படைந்த 5,692 பேரில் 5,679 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்றும், 13 பேர் வெளிநாடு மற்றும் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் என்று சுகாதாரத்துறை குறிப்பிட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் மொத்தம் கொரோனா பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 5,63,691 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 46,405 ஆக உள்ளது.
சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 1005 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,59,683 ஆக அதிகரித்துள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக அதிகப்பட்சமாக கோயம்பத்தூரில் 642 பேருக்கும், சேலத்தில் 311 பேருக்கும், செங்கல்பட்டில் 299 பேருக்கும் கொரோனா உறுதியாகி உள்ளது.
மேலும் தமிழகத்தில் இன்றைய தினம் 5,470 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 5,08,210 ஆக உயர்ந்துள்ளது.
உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையைப் பொருத்தவரை இன்றைய தினம் அரசு மருத்துவமனையில் 43 பேர், தனியார் மருத்துவமனையில் 23 பேர் என மொத்தம் 66 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், மொத்தமாக தற்போது வரை கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 9076 ஆக உயர்ந்துள்ளது.
இன்று ஒரு நாள் மட்டும் தமிழகத்தில் 88,784 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதாகவும், இதுவரை சுமார் 66,08,675 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை செய்தி வெளியிட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'வேணாம் சாமி, அந்த கதையே வேண்டாம்'...'இங்க போனாலே கொரோனா பாசிட்டிவ்'?... அச்சத்தில் மக்கள்!
- தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் நிலை எப்படி இருக்கு?.. MIOT மருத்துவமனை அதிகாரப் பூர்வ அறிவிப்பு!.. விரைவில் குணம் பெற முதல்வர் பழனிசாமி வாழ்த்து!
- "அந்நேரம் பெரும்பாலான அமெரிக்கர்கள் கையில் மருந்து போய் சேர்ந்திருக்கும்!".. கொரோனா தடுப்பூசிகள் வெளியாகும் மாதத்தை அறிவித்த சிடிசி தலைவர்!
- கேப்டனுக்கு என்னதான் ஆச்சு?.. “மருத்துவமனை சென்ற தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு...”.. கட்சி தரப்பில் வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
- 'தமிழகத்தின் இன்றைய கொரோனா அப்டேட்...' எந்த மாவட்டங்கள் முதல் மற்றும் 2-வது இடம்...? - மேலும் முழு விவரங்கள்...!
- இந்தியாவுக்கு பெருமிதம்!.. மூக்கு வழியாக செலுத்தப்படும் கொரோனா தடுப்பு மருந்து!.. அடுத்த அதிரடியில் இறங்கிய சீரம் நிறுவனம்!.. வெளியான பரபரப்பு தகவல்!
- "இதோ, இப்ப வந்துரும், வந்துரும்-ன்னு காத்திருந்த மக்களுக்கு... 'அதிர்ச்சி' கொடுத்த WHO...!" - தடுப்பூசி விஷயத்தில் வெளியான 'புதிய' தகவல்!!!
- "அடுத்த 6 மாசம் அள்ளு விடப் போகுது!.. முடிஞ்சா இத பண்ணுங்க".. 'மீண்டும்' வேலையை காட்டும் 'கொரோனா'!.. அப்படியே 'அந்தர் பல்டி' அடித்த 'நாடு'!
- "ஸ்டார்ட் ஆயிடுச்சு.. இது அதுதான்!".. கொரோனா தாக்கம் குறித்த முக்கிய எச்சரிக்கை விடுத்த கனடா சுகாதார இயக்குநர்!
- 'தமிழகத்தின் இன்றைய கொரோனா அப்டேட்...' எந்த மாவட்டங்கள் முதல் மற்றும் 2-வது இடம்...? - மேலும் முழு விவரங்கள்...!