'தமிழகத்தின் இன்றைய கொரோனா அப்டேட்...' எந்த மாவட்டங்கள் முதல் மற்றும் 2-வது இடம்...? - மேலும் முழு விவரங்கள்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் இன்று (21-09-2020) ஒரே நாளில் 5,344 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்படைந்த 5,344 பேரில் 5,341 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்றும், 3 பேர் வெளிநாடு மற்றும் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் என்று சுகாதாரத்துறை குறிப்பிட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் மொத்தம் கொரோனா பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 5,47,337 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 46,495 ஆக உள்ளது.
சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 982 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,56,625 ஆக அதிகரித்துள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக அதிகப்பட்சமாக கோயம்பத்தூரில் 648 பேருக்கும், சேலத்தில் 295 பேருக்கும் கொரோனா உறுதியாகி உள்ளது.
மேலும் தமிழகத்தில் இன்றைய தினம் 5,492 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4,49,971 ஆக உயர்ந்துள்ளது.
உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையைப் பொருத்தவரை இன்றைய தினம் அரசு மருத்துவமனையில் 31 பேர், தனியார் மருத்துவமனையில் 29 பேர் என மொத்தம் 60 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், மொத்தமாக தற்போது வரை கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 8,871 ஆக உயர்ந்துள்ளது.
இன்று ஒரு நாள் மட்டும் தமிழகத்தில் 78,841 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதாகவும், இதுவரை சுமார் 63,53,772 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை செய்தி வெளியிட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'குறைஞ்ச விலையில கொரோனா டெஸ்ட் பண்ணிக்கலாம்!'.. புழக்கத்துக்கு வரும் புதிய கருவி இதுதான்!
- 'சென்னை மக்களே இவரை நியாபகம் இருக்கா'... '30 வருசமா யாராலும் சிரிக்க வைக்க முடியல'... சிலை மனிதரின் வாழ்க்கையில் வந்த பெரும் சோதனை!
- கோவையில் மேலும் 568 பேருக்கு கொரோனா!.. சேலத்தில் வேகமெடுக்கிறது தொற்று!.. பிற மாவட்டங்களில் நிலவரம் என்ன?
- தமிழகத்தில் மேலும் 60 பேர் கொரோனாவுக்கு பலி!.. தடுமாறும் சென்னை!.. முழு விவரம் உள்ளே
- 'தமிழகத்தின் இன்றைய கொரோனா அப்டேட்...' எந்த மாவட்டங்கள் முதல் மற்றும் 2-வது இடம்...? - மேலும் முழு விவரங்கள்...!
- 'கொரோனா காலத்தில் சிறப்பான சிகிச்சை...' - ஓமந்தூரார் அரசு பன்நோக்கு மருத்துவமனைக்கு விருது...!
- 'எப்போக்குள்ள எல்லாருக்கும் தடுப்பூசி கிடைக்கும்?'... 'அப்ரூவ் ஆன 24 மணி நேரத்துல'... 'அதிபர் டிரம்ப் நம்பிக்கை தகவல்!'...
- 'சீன ஆய்வகத்திலிருந்து'... 'புதிதாக பரவியுள்ள பாக்டீரியா நோய்'... 'பாதிப்பு எண்ணிக்கை கவலை அளிப்பதாக'... 'சீன பத்திரிகை செய்தி!'...
- 'கொரோனா சிகிச்சைக்கான முதல் மருந்து'... 'பார்மசிகளில் அடுத்த வாரம் முதல் விற்பனை'... 'அதிரடி காட்டும் நாடு!'...
- '6,000 பேருக்கு வேலை, 60,000 பேருக்கு டிரெய்னிங்'... 'அதுவும் எங்க தெரியுமா?'... 'அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ள பிரபல குழுமம்!'...