'தமிழகத்தின் இன்றைய கொரோனா அப்டேட்...' எந்த மாவட்டங்கள் முதல் மற்றும் 2-வது இடம்...? - மேலும் முழு விவரங்கள்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் இன்று (17-09-2020) ஒரே நாளில் 5,560 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்படைந்த 5,560 பேரில் 5,555 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்றும், 5 பேர் வெளிநாடு மற்றும் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் என்று சுகாதாரத்துறை குறிப்பிட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் மொத்தம் கொரோனா பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 5,24,420 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 46,610 ஆக உள்ளது.
சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 992 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,52,567 ஆக அதிகரித்துள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக அதிகப்பட்சமாக கோயம்பத்தூரில் 530 பேருக்கும், சேலத்தில் 291 பேருக்கும், செங்கல்பட்டில் 283 பேருக்கும் கொரோனா உறுதியாகி உள்ளது.
மேலும் தமிழகத்தில் இன்றைய தினம் 5,524 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4,70,192 ஆக உயர்ந்துள்ளது.
உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையைப் பொருத்தவரை இன்றைய தினம் அரசு மருத்துவமனையில் 36 பேர், தனியார் மருத்துவமனையில் 23 பேர் என மொத்தம் 59 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், மொத்தமாக தற்போது வரை கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 8,618 ஆக உயர்ந்துள்ளது.
இன்று ஒரு நாள் மட்டும் தமிழகத்தில் 82,683 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதாகவும், இதுவரை சுமார் 60,23,627 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை செய்தி வெளியிட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "இளம் வீரர்களுக்கு காட்பாதர்!".. "கொரோனாவ ஈஸியா எடுத்துக்கக் கூடாது என்பதற்கான செய்தி இது!".. கிரிக்கெட் உலகை சோகத்தில் ஆழ்த்திய 'மினி கவாஸ்கரின்' மரணம்!
- 'இந்த டீலிங் எப்படி இருக்கு'!?.. ரஷ்யாவின் தடுப்பு மருந்தை... இந்தியாவில் தயாரிக்கப் போவது யார்?.. ஒப்பந்தம் இறுதியானது!
- 'தமிழகத்தின் இன்றைய கொரோனா அப்டேட்...' எந்த மாவட்டங்கள் முதல் மற்றும் 2-வது இடம்...? - மேலும் முழு விவரங்கள்...!
- 'வித்யாசமான மாஸ்க் போட்ருக்கார்னு நெனைச்சேன்.. டக்குனு திரும்பி பாத்தா..'.. பேருந்தில் சக பயணிகளை 'மிரளவைத்த' நபர்!
- 'தமிழகத்தின் இன்றைய கொரோனா அப்டேட்...' எந்த மாவட்டங்கள் முதல் மற்றும் 2-வது இடம்...? - மேலும் முழு விவரங்கள்...!
- 'என்ன பண்றது'... 'இப்படி ஏதாவது செஞ்சாதான் கேக்கறாங்க'... 'தண்டனையைக் கேட்டு பதறிப்போய்'... 'மாஸ்க் அணியும் மக்கள்!'...
- 'நெலம கைய மீறி போயிட்டிருக்கு... இனி பொறுமையா இருந்து பயனில்ல'!.. கொரோனா தடுப்பு மருந்துக்கு அவசர கால அனுமதி வழங்கிய நாடு!.. அப்படி என்ன நடந்தது?
- 'அதிகரிக்கும் கொரோனா'... 'செப்டம்பர் 25 ந்தேதி முதல் கடுமையான ஊரடங்கா'?... மத்திய அரசு விளக்கம்!
- 'தடுப்பு மருந்தை ஊசியா போட வேணாம்'... 'இது மட்டும் ஓகே ஆனா'... 'ஒரு பெரிய பிரச்சனை தீர்ந்துடும்'... 'பெரும் நம்பிக்கை தரும் புது ஆய்வு!'...
- 'இத மட்டும் செய்யலன்னா'... '2024ஆம் ஆண்டு வரை கூட ஆகலாம்'... 'தடுப்பூசி விஷயத்தில்'... 'முக்கிய தகவலுடன் எச்சரித்துள்ள சீரம் சிஇஓ!'...