'தமிழகத்தின் இன்றைய (07-10-2020) கொரோனா அப்டேட்...' சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில்...' எந்த மாவட்டங்கள் முதல் மற்றும் 2-வது இடம்...? - முழு விவரங்கள்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் இன்று (07-10-2020) ஒரே நாளில் 5,447 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்படைந்த 5,447 பேரில் 5,438 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்றும், 9 பேர் வெளிநாடு மற்றும் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் என்று சுகாதாரத்துறை குறிப்பிட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் மொத்தம் கொரோனா பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 6,35,855 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 45,135 ஆக உள்ளது.
சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 1,369 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,76,779 ஆக அதிகரித்துள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக அதிகப்பட்சமாக கோயம்பத்தூரில் 473 பேருக்கும், சேலத்தில் 322 பேருக்கும், செங்கல்பட்டில் 324 பேருக்கும் கொரோனா உறுதியாகி உள்ளது.
மேலும் தமிழகத்தில் இன்றைய தினம் 5,524 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 5,80,736 ஆக உயர்ந்துள்ளது.
உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையைப் பொருத்தவரை இன்றைய தினம் அரசு மருத்துவமனையில் 35 பேர், தனியார் மருத்துவமனையில் 32 பேர் என மொத்தம் 67 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், மொத்தமாக தற்போது வரை கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 9,984 ஆக உயர்ந்துள்ளது.
இன்று ஒரு நாள் மட்டும் தமிழகத்தில் 91,401 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதாகவும், இதுவரை சுமார் 77,25,962 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை செய்தி வெளியிட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'புதிய சிக்கலில் H-1B விசா!'... 'அமெரிக்காவின் திடீர் அறிவிப்பால்... திண்டாடப்போகும் இந்திய IT ஊழியர்கள்??!' - "மறுபடியும் என்னப்பா பிரச்சினை...???"
- "எப்போது வரும் தடுப்பூசி... என்று ஒழியும் கொரோனா...???" - 'காத்திருப்பிற்கு இடையே'... 'WHO வெளியிட்டிருக்கும் நம்பிக்கை தகவல்!!!'
- 'மீண்டும் மருத்துவமனையில் அனுமதி'... 'கேப்டன் உடல்நிலை குறித்து'... 'மியாட் மருத்துவமனை வெளியிட்டுள்ள புதிய அறிக்கை!!!'...
- "உலகத்துலயே இந்த மருந்துங்கள... ட்ரம்ப் ஒருத்தருக்குதான் குடுத்துருக்காங்க..." - 'அவர் மட்டும் அதிவேகத்தில் குணமடைவது எப்படி??!'... 'அப்படி என்ன ட்ரீட்மென்ட்???'
- 'தமிழகத்தின் இன்றைய (06-10-2020) கொரோனா அப்டேட்...' சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில்...' எந்த மாவட்டங்கள் முதல் மற்றும் 2-வது இடம்...? - முழு விவரங்கள்...!
- “இந்த கொரோனா வைரஸின் அடுத்த கட்டம்தான் என்ன?” - ‘உலக சுகாதார மையம்’ வெளியிட்டுள்ள ‘பரபரப்பு’ தகவல்!
- "கொரோனால இறந்துட்டாரு... இறுதி சடங்கு முடித்த பிறகுதான்..." - 'பேரதிர்ச்சியில் உறைந்துபோன குடும்பம்'... 'பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சம்பவம்!!!'
- 'பரிசோதனையிலுள்ள தடுப்பூசிக்கு'... 'எமர்ஜென்சி அனுமதியைப் பெறும் முன்னணி நிறுவனம்?!!'... 'அப்போ, மருந்து சீக்கிரம் வந்துடுமா???
- 'தமிழகத்தின் இன்றைய (05-10-2020) கொரோனா அப்டேட்...' சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில்...' எந்த மாவட்டங்கள் முதல் மற்றும் 2-வது இடம்...? - முழு விவரங்கள்...!
- 'சென்னையில் மீண்டும் 'அதிகரிக்கும்' கட்டுப்பாட்டு பகுதிகள்'... 'ஹாட் ஸ்பாட்டாக உருவாகும் பெருநகரின் முக்கிய ஏரியா'... 'மாநகராட்சி வெளியிட்டுள்ள புதிய தகவல்!!!'...