'தமிழகத்தின் இன்றைய கொரோனா அப்டேட்...' எந்த மாவட்டங்கள் முதல் மற்றும் 2-வது இடம்...? - மேலும் முழு விவரங்கள்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் இன்று (04-10-2020) ஒரே நாளில் 5,489 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்படைந்த 5,489 பேரில் 5,482 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்றும், 7 பேர் வெளிநாடு மற்றும் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் என்று சுகாதாரத்துறை குறிப்பிட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் மொத்தம் கொரோனா பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 6,19,996 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 46,120 ஆக உள்ளது.
சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 1,348 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,72,773 ஆக அதிகரித்துள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக அதிகப்பட்சமாக கோயம்பத்தூரில் 474 பேருக்கும், செங்கல்பட்டில் 381 பேருக்கும், சேலத்தில் 356 பேருக்கும் கொரோனா உறுதியாகி உள்ளது.
மேலும் தமிழகத்தில் இன்றைய தினம் 5,558 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 5,64,092 ஆக உயர்ந்துள்ளது.
உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையைப் பொருத்தவரை இன்றைய தினம் அரசு மருத்துவமனையில் 37 பேர், தனியார் மருத்துவமனையில் 29 பேர் என மொத்தம் 66 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், மொத்தமாக தற்போது வரை கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 9,784 ஆக உயர்ந்துள்ளது.
இன்று ஒரு நாள் மட்டும் தமிழகத்தில் 84,159 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதாகவும், இதுவரை சுமார் 74,74,414 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை செய்தி வெளியிட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- டிரம்புக்கு ஆபத்தா?.. 'அபாய கட்டத்தில் இருந்து மீளவில்லை!'.. மருத்துவர்கள் பகீர் கருத்து!.. அமெரிக்காவில் பரபரப்பு!
- “மேலும் 5,622 பேருக்கு கொரோனா!”.. வெளியான பலி எண்ணிக்கை! தமிழகத்தில் இன்றைய பாதிப்பு.. முழு விபரம்!
- “4 வருஷமா இப்படி ட்வீட் பண்றது...”.. அமெரிக்க முன்னாள் தேர்தல் செய்தித் தொடர்பாளரின் ‘சர்ச்சை ட்வீட்டும்.. உடனடி டெலிட்டும்’.. கிளம்பிய கடும் விமர்சனங்கள்!
- 'ஊர்ல அமெரிக்கா ரிட்டர்ன்னு எவ்வளவு பெருமையா இருக்கும்'... 'ஆனா இப்படி ஒரு நிலைமையா'?... அதிரவைக்கும் அறிக்கை!
- 'எங்க ஊழியர்கள்ல 20,000 பேருக்கு கொரோனா'... 'ஷாக் தகவலை வெளியிட்ட'... 'பிரபல ஆன்லைன் டெலிவரி நிறுவனம்!!!'...
- "எப்படி இருக்கிறார் கேப்டன்?"... 'தேமுதிக தலைவர் விஜயகாந்த், மனைவி பிரேமலதா உடல்நிலை குறித்து'... 'மியாட் மருத்துவமனை வெளியிட்டுள்ள புதிய அறிக்கை!'...
- "அதிபர் டிரம்ப்புக்கு கொரோனாவா??? எப்படி வந்தது...?" - 'Twitter-ல் அவரே சொல்லும் காரணம்...!!!'
- “லாக்டவுன்ல வேலை, வருமானங்களை பலர் இழந்துருக்காங்க!”.. தனியார் கல்விக்கட்டணத்தில் 25% தள்ளுபடி - மாநில அரசு அதிரடி!
- '1.85 லட்சம் IT Employees-க்கு அடிக்கப்போகும் ஜாக்பாட்!!!'... 'Wipro-வின் அறிவிப்பால்'... 'குஷியான ஊழியர்கள்...!!!'
- 'தமிழகத்தின் இன்றைய கொரோனா அப்டேட்...' எந்த மாவட்டங்கள் முதல் மற்றும் 2-வது இடம்...? - மேலும் முழு விவரங்கள்...!