'தமிழகத்தின் இன்றைய (18-11-2020) கொரோனா அப்டேட்...' சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில்...' - முழு விவரங்கள் உள்ளே...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகத்தில் இன்று (18-11-2020) ஒரே நாளில் 1,714 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

'தமிழகத்தின் இன்றைய (18-11-2020) கொரோனா அப்டேட்...' சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில்...' - முழு விவரங்கள் உள்ளே...!

தமிழகத்தில் மொத்தம் கொரோனா பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 7,63,282 ஆக உயர்ந்துள்ளது. மேலும் மருத்துவமனையில் சுமார் 14,470 சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்துள்ளனர். கொரோனா பாதிக்கப்பட்ட 1,714 பேரில் 10 பேர் வேற்றுமாநிலத்தவர்.

சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 479 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,10,135 ஆக அதிகரித்துள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக அதிகப்பட்சமாக கோயம்பத்தூரில் 162 பேருக்கும், செங்கல்பட்டில் 129 பேருக்கும் மற்றும் திருவள்ளூரில் 112 பேருக்கும் கொரோனா உறுதியாகி உள்ளது.

மேலும் தமிழகத்தில் இன்றைய தினம் 2,311 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 7,37,281 ஆக உயர்ந்துள்ளது.

உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையைப் பொறுத்தவரை அரசு மருத்துவமனையில் 8 பேரும், தனியார் மருத்துவமனையில் 10 பேர் என மொத்தம் 18 பேர் உயிரிழந்துள்ளதாகவும், இதன்காரணமாக இதுவரை சுமார் 11,531 பேர் உயிரிழந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை குறிப்பிட்டுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்