'இந்தியா'லயே நாம தான் 'ஃபர்ஸ்ட்'... வீட்டில் 'தனிமை'யில் உள்ளவர்களுக்காக... 'தமிழக' அரசு அறிவித்த 'அதிரடி' திட்டம்!!!... முழு 'விவரம்' உள்ளே...
முகப்பு > செய்திகள் > தமிழகம்கொரோனா தொற்று ஏற்பட்டு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பவர்களுக்கு வேண்டி அம்மா கோவிட் - 19 வீட்டு பராமரிப்பு திட்டத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார்.
நாடு முழுவதும் கொரோனா தொற்று கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் நிலையில், தமிழ்நாட்டில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த வேண்டி தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை கையாண்டு வருகிறது. இதுவரை நடமாடும் பரிசோதனை முகாம், காய்ச்சல் பரிசோதனை உள்ளிட்ட சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், இந்தியாவிலேயே முதல் முறையாக, கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமையில் இருப்பவர்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டி புதிய திட்டம் ஒன்றை தமிழக அரசு கையில் எடுத்துள்ளது. இந்த திட்டத்தின் பெயர் அம்மா கோவிட் - 19 வீட்டு பராமரிப்பு திட்டமாகும்.
இந்த திட்டத்தின் கீழ், வீட்டுத்தனிமையில் கீழ் உள்ளவர்களை கண்காணிக்க வேண்டி 20 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் சுழற்சி முறையில் பணியாற்றுவார்கள். வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள கொரோனா நோயாளிகளுக்கு பல்ஸ் ஆக்சிமீட்டர் கருவி, வெப்பமானி, வைட்டமின் மாத்திரைகள், 14 முகக்கவசங்கள், கிருமி நாசினி அடங்கிய தொகுப்பு வழங்கப்படும். இந்த திட்டத்தின் கீழ், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருப்பவர்கள் 2500 ரூபாய் கட்டணம் செலுத்தி பயன்பெறலாம்.
மேலும், கொரோனா குறித்த விழிப்புணர்வை தமிழகத்தில் ஏற்படுத்த வேண்டி, எல்இடி வீடியோ வாகனங்களின் சேவையை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார். மண்டலத்திற்கு தலா 2 வாகனம் என 15 மண்டலங்களுக்கு 30 எல்இடி வீடியோ வாகனங்களின் சேவை தொடங்கப்பட்டுள்ளது. அதே போல, மேலும் சில திட்டங்களையும் தமிழக முதல்வர் இன்று தொடங்கி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- தமிழகத்திற்கு 'கொரோனா' தடுப்பு நிதியாக '500' கோடி 'ரூபாய்' அளித்த 'மத்திய' அரசு... இன்னும் அதிக 'நிதி' தேவை... பிரதமருக்கு கோரிக்கை விடுத்த 'தமிழக' முதல்வர்!!!
- இருக்குற ‘கடினமான’ சூழ்நிலையிலும்... ‘ஆயிரக்கணக்கான பேருக்கு’ புதிய வேலைவாய்ப்புகள்...! - அசத்தும் ‘தமிழக அரசின்’ புதிய ‘இணையதளம்'!
- ’அதிக முதலீடுகளை ஈர்த்த மாநிலங்களில்... ’தமிழகம்’ தான் டாப்! ’லாக்டெளன்’ காலத்திலும்... வளர்ச்சி பாதையில் ’முன்னேறும்’ தமிழ்நாடு...!’ - ஆய்வு முடிவில் வெளியான தகவல்!
- இப்போதைக்கு 'வாய்ப்பில்ல'... 'தமிழக' முதல்வரின் அறிவிப்பால்... மகிழ்ச்சியில் ‘திக்குமுக்காடி’ போய் நிற்கும் 'கல்லூரி' மாணவர்கள்!
- "போடுறா 'வெடி'ய...!" - தமிழக ’முதலமைச்சருக்கு’ அமெரிக்காவிலிருந்து பறந்து வந்த ‘சர்வதேச’ கெளரவம்!
- VIDEO : சாத்தான்குளம் தந்தை - மகன் 'உயிரிழப்பு' விவகாரம்... 'சிபிஐ' விசாரிக்க தமிழக 'முதல்வர்' அதிரடி உத்தரவு!
- மாவட்டம் விட்டு 'மாவட்டம்' செல்ல... ஜூன் 30 வர வாய்ப்பில்ல... எல்லைகள் எல்லாம் 'closed'... தமிழக முதல்வர் உத்தரவு!
- தமிழகத்தில் 'பத்தாம்' வகுப்பு பொதுத் தேர்வுகள் 'ரத்து'... எந்த அடிப்படையில் 'மதிப்பெண்கள்' வழங்கப்படும்?... தமிழக 'முதல்வர்' அறிவிப்பு!
- தமிழகத்தில் '17' வெளிநாட்டு நிறுவனங்கள்... சுமார் 15 ஆயிரம் கோடிக்கு 'முதலீடு'... 'இத்தனை' பேருக்கு 'வேலை' கிடைக்குமாம்... தமிழக அரசின் செம 'பிளான்'!
- நம்ம நியாயமா 'கேள்வி' கேட்டா... 'எஜமானர்' மனசு 'கோணிடும்' பாருங்க... கமல்ஹாசனின் நேரடி 'அட்டாக்'!