ஒரே நாள்ல இவ்வளவு உயர்ந்திடுச்சா...? 'ஆயிரத்தை தாண்டி போய்ட்ருக்கு...' 'சென்னையில் மட்டும் ஒரே நாளில்...' - அதிர்ச்சி ரிப்போர்ட்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் இன்று (21-03-2021) ஒரே நாளில் 1,289 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்படைந்த 1,289 பேரில் 1,280 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்றும், 9 பேர் வெளிநாடு மற்றும் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் என்று சுகாதார துறை குறிப்பிட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் மொத்தம் கொரோனா பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 8,66,982 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 7,903 ஆக உள்ளது.
சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 466 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,41,623 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் தமிழகத்தில் இன்றைய தினம் 668 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுமுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 8,46,480 ஆக உயர்ந்துள்ளது.
உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையைப்பொருத்தவரை இன்றைய தினம் அரசு மருத்துவமனையில் 5 பேர், தனியார் மருத்துவமனையில் 4 பேர் என மொத்தம் 9 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், மொத்தமாக தற்போது வரை கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 12,599 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்படைந்த 8,66,982 பேரில் ஆண்கள் 4,32,777 பேர் எனவும், பெண்கள் 2,83,781 பேர் மற்றும் வேற்றுப்பாலினத்தவர் 35 ஆக உள்ளனர்.
தற்போது சென்னை உட்பட தமிழகமெங்கும் கொரோனா பரவல் அதிகமாக காணப்படுவதால் பொதுமக்கள் முன்னேசெரிக்கையாக மாஸ்க் அணிவது உள்ளிட்ட விசயங்களில் அலட்சியம் காட்டாமல் முறையாக பின்பற்ற வேண்டியது மக்களின் கடமை ஆகும்
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- தமிழகத்தில் மின்னல் வேகத்தில் பரவும் கொரோனா!.. ஒரே நாளில் 1,000 பேருக்கு மேல் தொற்று உறுதி!.. அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சி தகவல்!
- Breaking: 'தமிழகத்தில் ஒரே நாளில் 1000 பேருக்கு கொரோனா பாசிடிவ்...' 'அலட்சியம் வேண்டாம் மக்களே...! 'எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரம் இது...' - முழு விவரங்கள்...!
- 'எனக்கு கொரோனா பாசிடிவ்...' 'மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் டிவிட்டரில் வெளியிட்ட தகவல்...!
- 'எவ்ளோ கம்மியா இருந்துச்சு...' 'இப்போ நாளுக்கு நாள் எகிறிட்டே போகுது...' 'சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில்...' - முழு விவரம்...!
- சென்னையில் மீண்டும் ஊரடங்கா...? - விளக்கம் அளித்த மாநகராட்சி ஆணையர்...!
- மிரட்டும் கொரோனா 2வது அலை!.. தமிழகத்தின் மாஸ்டர் பிளான் 'இது' தான்!.. விரிவான தகவல்!
- வாரத்தில் 4 நாட்கள் மட்டும் வேலை!.. 3 நாட்கள் லீவ்!!.. அமலுக்கு வந்தது புதிய நடைமுறை!.. அதிரடி காட்டும் நாடு!.. 'இது நமக்கும் செட் ஆகுமா'?
- மீண்டும் தலைதூக்கும் கொரோனா!.. தீர்வு தான் என்ன?.. பிரதமர் மோடி முதலமைச்சர்களிடம் தெரிவித்த அதிர்ச்சி தகவல்!
- 'தீயா பரவிட்டு இருக்கு மக்களே...' 'இதுக்கு மேலையும் கவனக்குறைவா இருக்க கூடாது...' 'சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில்...' 'தமிழகத்தின் இன்றைய கொரானா அப்டேட்...' - முழு விவரம்...!
- தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கா? - சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பதில்...!