'தமிழகத்தில் இன்றைய கொரோனா அப்டேட்...' 'சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில்...' - இன்னும் கூடுதல் தகவல்கள்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் இன்று (27-08-2020) ஒரே நாளில் 5981 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்படைந்த 5981 பேரில் 5951 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்றும், 30 பேர் வெளிநாடு மற்றும் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் என்று சுகாதார துறை குறிப்பிட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் மொத்தம் கொரோனா பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 4,03,242 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 52,364 ஆக உள்ளது.
சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 1,286 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,29,247 ஆக அதிகரித்துள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக கோயம்பத்தூரில் 439 பேருக்கும், செங்கல்பட்டில் 298 பேருக்கும் கடலூரில் 261 பேருக்கும்1,30,564 கொரோனா உறுதியாகியுள்ளது.
மேலும் தமிழகத்தில் இன்றைய தினம் 5,870 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுமுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,43,930 ஆக உயர்ந்துள்ளது.
உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையைப் பொருத்தவரை இன்றைய தினம் அரசு மருத்துவமனையில் 79 பேர், தனியார் மருத்துவமனையில் 30 பேர் என மொத்தம் 109 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், மொத்தமாக தற்போது வரை கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 6,948 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை தமிழகத்தில் மொத்தம் 43,47,511 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக சுகாதார துறை அறிவித்துள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'இப்படி ஒரு ஆஃபர் போட்டா பிரியாணி லவ்வர்ஸ் சும்மா இருப்பாங்களா'... 'ரவுண்ட் கட்டிய வாடிக்கையாளர்கள்'... காத்திருந்த அதிர்ச்சி!
- 'மொத்தமா 25000 பேரு அதுல இந்தியால மட்டும்'... 'பிரபல நிறுவனத்தின் முடிவால்'... 'கலக்கத்தில் உள்ள ஊழியர்கள்!'...
- 'ஆஹா'.. 'அசத்தலான ரிசல்ட்ஸ்'.. 'மனுஷங்களுக்கு' பாதுகாப்பாக 'கருதப்படும்' கொரோனா 'மருந்தை' தயாரித்த 'நாடு'!
- 'தமிழகத்தில் இன்றைய கொரோனா அப்டேட்...' 'சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில்...' - இன்னும் கூடுதல் தகவல்கள்...!
- 'சென்னையில் நாளை (27-08-2020)'... 'பிரதான ஏரியாக்களில் பவர்கட்'... 'விவரங்கள் உள்ளே'
- 'கொரோனா கோவிஷீல்டு தடுப்பூசி'... 'எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள முதலமைச்சரின் உத்தரவு'... முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர்!
- இந்தியாவுக்கு பெருமிதம்!.. கொரோனா பரிசோதனையில்... Rapid test kits அறிமுகம்!.. இந்த முறை மிஸ் ஆகாது'!.. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் 'அதிரடி'!
- 'எல்லாமே பக்காவா இருக்கு!.. ஒரு வேல தாமதம் ஆச்சுனா... 'இது' தான் Climax!.. கொரோனா தடுப்பு மருந்தை வைத்து... டிரம்ப் போட்டுள்ள 'மாஸ்டர் ப்ளான்'!
- 'காசெல்லாம் காலி'... 'இனி பண்ண ஒன்னும் இல்ல'... '19000 ஊழியர்களுக்கு ஷாக் கொடுத்த'... 'பிரபல நிறுவனத்தின் அதிரடி முடிவு!'...
- 'நீங்க தான் அந்த லக்கி வின்னர்!'... '350 ரூபாய்க்கு வாங்கிய போர்வை!.. பம்பர் பரிசு அறிவிப்பு'!.. Cash-ஆ? Car-ஆ?.. வாடிக்கையாளர் 'செம்ம' ட்விஸ்ட்!