'ஒரே நாள்ல இவ்வளவா?'.. தமிழகத்தில் புதிய உச்சம் தொட்ட கொரோனா!.. கடந்த 2 நாட்களில் மட்டும் 15 பேர் பலி!.. சுகாதாரத்துறை பரபரப்பு தகவல்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 817 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Advertising
Advertising

தமிழகத்தில் தினந்தோறும் கொரோனா வைரஸ் பாதிப்புகள் குறித்த அறிவிப்புகள் சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று வெளியான தகவலில் இன்று மட்டும் தமிழகத்தில் 817 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 18,545 ஆக உயர்ந்துள்ளது. இதனை பாலின ரீதியாக பகுப்பாய்வு செய்ததில் 11,725 ஆண்களும், 6,815 பெண்களும், 5 திருநங்கைகளும் பாதிக்கப்பட்டிருப்பதாக அறியப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 133 ஆக உயர்ந்திருக்கிறது. கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 9,909 ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையே, 8,500 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னையில் இன்று ஒரே நாளில் 558 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னையில் மட்டும் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 12,203 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் தற்போதுவரை 4,23,018 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்