தமிழகத்தில் இன்றைய கொரோனா அப்டேட் : 'சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில்...' இன்னும் கூடுதல் தகவல்கள்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் இன்று (16-05-2020) மட்டும் சுமார் 477 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர் என சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
477 பேரில் சென்னையில் மட்டும் 332 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 6278 ஆக உயர்ந்துள்ளது. மேலும் ஈரோட்டில் 31 நாட்களாகவும், திருப்பூரில் 15 நாட்களாகவும், கோவையில் 13 நாட்களாகவும் புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று இல்லை.
மேலும் இன்று உறுதி செய்யப்பட்ட 477 பேரில் 384 பேர் தமிழ்நாட்டை சேர்த்தவர்கள் என்றும், 4 பேர் வங்காளத்தை சேர்ந்த டாக்கா நகரத்தை சேர்த்தவர்கள். மேலும் 81 பேர் மகாராஷ்டிரா, 7 பேர் குஜராத் மற்றும் ஒருவர் ஆந்திராவை சேர்ந்தவர்களுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 477 பேரில் 302 ஆண்களும், 174 பெண்களும் என்ற எண்ணிக்கையையும் வெளியிட்டுள்ளனர். அதிகப்படியாக இன்று மட்டும் 939 பேர் உடல் நலமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 10,585 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் ஆண்கள் 6945 பேர், பெண்கள் 3637 மற்றும் வேறு பாலினத்தவர் 3 பேர் ஆகும்.
இதுவரை சுமார் 3538 நோயாளிகள் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். மேலும் பலி எண்ணிக்கை 74 ஆக உள்ளது.
இன்று(16-05-2020) வரை கொரோனா தொற்று பரிசோதனை செய்தவர்களின் எண்ணிக்கை 3,13,639 ஆகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று மட்டும் சுமார் 10,535 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதுவரை 2,99,176 மாதிரிகளை ஆய்விற்கு உட்படுத்தியுள்ளனர். இன்று மற்றும் 8270 மாதிரிகளை ஆய்வு மேற்கொண்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'இது ஆரம்பம் தான், இன்னும் பரவலாம்'... 'அமெரிக்காவுக்கு வந்த புதிய தலைவலி'... '2 குழந்தைகள் பலி'... அதிர்ச்சியில் பெற்றோர்!
- மிகுந்த 'நம்பிக்கையளிக்கும் தடுப்பூசி...' அடுத்த 'மாதத்திற்குள்' சோதனை 'முடிவு' கிடைத்து விடும்... '10 கோடி' தடுப்பூசிகள் தயாரிக்கத் 'திட்டம்...'
- 'நியாயமான திருடன்...' 'மன்னிப்பு கடிதம் வேற...' 'இருந்தாலும்' அவங்க 'நிலைமை' அப்படி...
- 'எதிரியை' இந்தியாவுடன் சேர்ந்து 'வீழ்த்துவோம்...' இந்த ஆண்டு 'இறுதிக்குள்' ஒரு 'முடிவு' கிடைத்து விடும்... 'அதிபர் ட்ரம்ப் உறுதி...'
- ஊழியர்களை 'வேலையை' விட்டு தூக்கி... 'சம்பளத்திலும்' 50% கைவைத்த 'முன்னணி' நிறுவனம்!
- 'பெண்களை' விட ஆண்களை... கொரோனா அதிகமா 'தாக்குறதுக்கு' காரணம் இதுதானாம்... உடைந்த மர்மம்!
- "எதிர்பார்க்கவே இல்லை..." "திடீரென இப்படி பரவும் என..." 'கொரோனா' தன் வேலையை காட்ட 'ஆரம்பிச்சிடுச்சு...' அட்வான்ஸாக '2000 கல்லறைகளுக்கு' ஏற்பாடு...
- கங்கை நதி என்றாலே கோயில் மட்டுமில்ல... இனிமே 'இது'க்காகவும் தான்!.. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அதிரடி திட்டம்!
- தமிழகம் முழுவதும் 'பேருந்து' எப்போது இயக்கப்படும்?... 'சென்னை'யின் நிலை என்ன?
- தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்தது!.. புதிய வடிவில் மேலும் சில சிக்கல்கள்!.. சுகாதாரத்துறை பரபரப்பு தகவல்!