'தீயா பரவிட்டு இருக்கு மக்களே...' 'இதுக்கு மேலையும் கவனக்குறைவா இருக்க கூடாது...' 'சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில்...' 'தமிழகத்தின் இன்றைய கொரானா அப்டேட்...' - முழு விவரம்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் இன்று (17-03-2021) ஒரே நாளில் 945 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்படைந்த 945 பேரில் 938 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்றும், 7 பேர் வெளிநாடு மற்றும் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் என்று சுகாதார துறை குறிப்பிட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் மொத்தம் கொரோனா பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 8,62,374 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 5,811 ஆக உள்ளது.
சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 395 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,39,878 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் தமிழகத்தில் இன்றைய தினம் 576 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுமுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 8,43,999 ஆக உயர்ந்துள்ளது.
உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையைப்பொருத்தவரை இன்றைய தினம் அரசு மருத்துவமனையில் 4 பேர், தனியார் மருத்துவமனையில் 4 பேர் என மொத்தம் 8 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், மொத்தமாக தற்போது வரை கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 12,564 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்படைந்த 8,62,374 பேரில் ஆண்கள் 4,30,672 பேர் எனவும், பெண்கள் 2,82,287 பேர் மற்றும் வேற்றுப்பாலினத்தவர் 35 ஆக உள்ளனர்.
தற்போது சென்னை உட்பட தமிழகமெங்கும் கொரோனா பரவல் அதிகமாக காணப்படுவதால் பொதுமக்கள் முன்னேசெரிக்கையாக மாஸ்க் அணிவது உள்ளிட்ட விசயங்களில் அலட்சியம் காட்டாமல் முறையாக பின்பற்ற வேண்டியது மக்களின் கடமை ஆகும்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கா? - சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பதில்...!
- 'தமிழகத்தில் பள்ளிகள் தொடர்ந்து நடைபெறுமா'?... கல்வித்துறை அதிகாரிகள் விளக்கம்!
- 'லாக்டவுன் போடுறது மட்டும் தான் ஒரே ஆப்ஷனா'?... 'இதை ஏன் நாம முயற்சிக்க கூடாது'?... 'ஆனந்த் மகேந்திரா' சொன்ன சூப்பர் ஐடியா!
- 'அதிகரிக்கும் கொரோனா'... 'ரொம்ப எச்சரிக்கையா இருங்க மக்களே'... 'மாஸ்க் அணியாவிட்டால் அபராதம்'... தமிழக அரசு!
- 'பயமுறுத்தும் எண்ணிக்கை'...'தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கா'?... 'தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன்' அவசர ஆலோசனை!
- பாய்ச்சல் எடுக்கும் கொரோனா... நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போகும் எண்ணிக்கை... மக்களே, இனிமே தான் நாம உஷாரா இருக்கனும்! - முழு விவரம் உள்ளே!
- 'என்ன மக்களே, மாஸ்க் வேண்டாம்ன்னு முடிவு பண்ணிட்டோமா'?... 'தமிழகத்தில் ஒரே வாரத்தில் அதிர்ச்சி அளித்த ரிப்போர்ட்'... அலட்சியம் காரணமா?
- 'எப்படி பரபரப்பா இருந்த ஊரு'... 'ஊரடங்கால் முடங்கிப்போன சாலைகள்'... மக்களையே எச்சரிக்கையா இருங்க!
- 'இனிமேல் தான் மக்கள் ரொம்ப அலெர்ட்டா இருக்கணும்...' - சென்னையில் ஜெட் வேகத்தில் எகிறும் கொரோனோ...! பிற மாவட்டங்களிலும் கூடிக்கொண்டே வருகிறது... - முழு விவரம் உள்ளே!
- 'இனிமேல் தான் மக்கள் ரொம்ப அலெர்ட்டா இருக்கணும்...' - சென்னையில் சத்தமில்லாம எகிறும் கொரோனோ...! பிற மாவட்டங்களிலும் கூடிக்கொண்டே வருகிறது... - முழு விவரம் உள்ளே!