'தமிழகத்தில் இன்றைய கொரோனா அப்டேட்...' 'சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில்...' - இன்னும் கூடுதல் தகவல்கள்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் இன்று (23-08-2020 ) ஒரே நாளில் 5,975 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்படைந்த 5,975 பேரில் 5,942 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்றும், 33 பேர் வெளிநாடு மற்றும் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் என்று சுகாதார துறை குறிப்பிட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் மொத்தம் கொரோனா பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 3,79,385 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 53,541 ஆக உள்ளது.
சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 1,298 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,25,389 ஆக அதிகரித்துள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக கோயம்பத்தூரில் 392 பேருக்கும், செங்கல்பட்டில் 352 பேருக்கும், கடலூரில் 380 பேருக்கும், திருவள்ளூரில் 354 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.
மேலும் தமிழகத்தில் இன்றைய தினம் 6,047 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுமுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,19,327 ஆக உயர்ந்துள்ளது.
உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையைப்பொருத்தவரை இன்றைய தினம் அரசு மருத்துவமனையில் 76 பேர், தனியார் மருத்துவமனையில் 21 பேர் என மொத்தம் 97 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், மொத்தமாக தற்போது வரை கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 6,517 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்படைந்த 3,19,327 பேரில் ஆண்கள் 2,29,068 பேர் எனவும், பெண்கள் 1,50,288 பேர் மற்றும் வேற்றுப்பாலினத்தவர் 29 ஆக உள்ளனர். இதுவரை தமிழகத்தில் மொத்தம் 40,63,624 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக சுகாதார துறை அறிவித்துள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘இன்னும் 73 நாளில்.. கொரோனா மருந்து கைக்கு வருகிறதா?’ .. சீரம் நிறுவன தரப்பு விளக்கம் என்ன?
- 'நீண்ட நாட்களுக்குபின் குறைந்த உயிரிழப்பு'... 'ஆனாலும் சென்னையில்'... 'இன்றைய (ஆகஸ்டு 22, 2020) தமிழக கொரோனா நிலவரம்'...
- 'இ பாஸ் குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்ட உள்துறை அமைச்சகம்'... உள்துறை செயலர் அதிரடி!
- 'கொசுவால் பரவும் வெஸ்ட் நைல் வைரஸ்'... 'கொரோனா கட்டுப்படுவதற்குள் அடுத்தடுத்த உயிரிழப்பு'... 'பீதியில் உள்ள நாட்டு மக்கள்!'...
- 'ஒரு பக்கம் கொரோனா பீதி, இன்னொரு பக்கம் இதுவேறையா'... தூக்கம் தொலைத்த சென்னை மக்கள்!
- 'இனி மாஸ்க் எல்லாம் தேவையில்ல'... 'என்னதான் நடக்குது அங்க?'... 'அதிரடி அறிவிப்புகளால் ஷாக் கொடுக்கும் நாடு!'...
- 'ரஷ்யாவின் தடுப்பு மருந்துக்கு பின்னால் 'இப்படி' ஒரு ஆபத்தா!?'.. 'இதுக்கு மருந்தே பயன்படுத்தாம இருப்பது நல்லது'!.. எச்சரிக்கும் விஞ்ஞானிகள்!
- 101 பேர் பலி... சென்னை உட்பட தமிழகத்தில் இன்றைய (ஆகஸ்டு 21, 2020) கொரோனா பாதிப்பு முழு விபரம்!
- 'தமிழக கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை ஆரம்பிக்கலாம்'... 'தேதியை அறிவித்த அரசு'... பெற்றோர் வர தேவையில்லை!
- “கொரோனாவுக்கு இறுதி நாள் குறிச்சாச்சு!”.. “ஆனா அதுக்கு நடுவுல, உச்சக்கு போகும்.. இவ்ளோ பேர் பாதிக்கப்படுவாங்க!”.. தேதிகளுடன் வெளியான ‘அடுத்த கட்ட’ ஆய்வு முடிவுகள்!