'தமிழகத்தில் இன்றைய கொரோனா அப்டேட்...' 'சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில்...' 'அதிகரிக்கும் பலி எண்ணிக்கை...' - இன்னும் கூடுதல் தகவல்கள்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் இன்று (16-08-2020) ஒரே நாளில் 5,950 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்படைந்த 5,950 பேரில் 5,918 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்றும், 32பேர் வெளிநாடு மற்றும் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் என்று சுகாதார துறை குறிப்பிட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் மொத்தம் கொரோனா பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 3,38,055 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 54,019 ஆக உள்ளது.
சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 1196 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,16,650 ஆக அதிகரித்துள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக திருவள்ளூரில் 488 பேருக்கும், செங்கல்பட்டில் 436 பேருக்கும், கோயம்பத்தூரில் 395 பேருக்கும் மற்றும் காஞ்சிபுரத்தில் 307 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.
மேலும் தமிழகத்தில் இன்றைய தினம் 6,019 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுமுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,78,270 ஆக உயர்ந்துள்ளது.
உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையைப்பொருத்தவரை இன்றைய தினம் அரசு மருத்துவமனையில் 86 பேர், தனியார் மருத்துவமனையில் 39 பேர் என மொத்தம் 125 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், மொத்தமாக தற்போது வரை கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 5,766 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்படைந்த 3,38,055 பேரில் ஆண்கள் 2,03,838 பேர் எனவும், பெண்கள் 1,34,188 பேர் மற்றும் வேற்றுப்பாலினத்தவர் 29 ஆக உள்ளனர். இதுவரை தமிழகத்தில் மொத்தம் 35,81,939 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக சுகாதார துறை அறிவித்துள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'ஒருபுறம் எகிறிய கொரோனா பாதிப்பு'... 'வீட்டை விட்டு வெளியேறாத மக்களால்'... 'மறுபுறம் நிகழ்ந்துள்ள பெரும் நன்மை!'...
- 'பெரும்பாலும் இந்த வரிசையில தான் அறிகுறிகள் உண்டாகுது'... 'புதிய தகவலுடன் நம்பிக்கை தெரிவித்துள்ள ஆய்வாளர்கள்!'...
- “எல்லாம் முடிஞ்சுதுனு பாத்தா.. திரும்பவும் மொதல்ல இருந்தா?”.. மீண்டும் சீனாவில் வெளியான ‘கிடுகிடுக்க’ வைக்கும் தகவல்!
- “அப்ளை பண்ற எல்லாருக்கும் இ-பாஸ்!!”.. ‘மாவட்ட எல்லைகளை’ கடக்க ‘இ-பாஸ்’ அவசியமா? - போலீஸ் சொல்வது என்ன?
- 'போதும் பா சாமி!.. இதுக்கு மேல தாங்காது!'.. Bench Employees-ஐ வேலையைவிட்டு கிளப்பும் ஐடி நிறுவனங்கள்!.. BPO நிலையும் மோசம்!.. அதிர்ச்சி தகவல்!
- மீண்டும் வேகமெடுக்கும் 'கொரோனா' தொற்று... 2-வது அலையா? கலக்கத்தில் சீனா!
- உலகின் முதல் கொரோனா 'தடுப்பூசி' தயாரிப்பில் தீவிரம் காட்டும் நாடு... எப்போது சந்தைக்கு வரும்?... வெளியான புதிய தகவல்!
- திருவள்ளூரில் மேலும் 422 பேருக்கு கொரோனா!.. சேலத்தில் வேகமெடுக்கிறது தொற்று!.. பிற மாவட்டங்களில் நிலவரம் என்ன?
- தமிழகத்தில் ஒரே நாளில் இவ்வளவு உயிரிழப்பா!?.. நெஞ்சை நொறுக்கிய கொரோனா பலி எண்ணிக்கை!.. முழு விவரம் உள்ளே!
- 9 தடுப்பூசிகள் 'சோதனை'யில இருக்கு... ஆனா அந்த லிஸ்ட்ல ரஷ்யா இல்ல... 'அதிர்ச்சி' கொடுக்கும் உலக சுகாதார நிறுவனம்!