'அங்க எல்லாம் கம்மியாகுது'... 'இந்த 3 மாவட்டங்கள்தான்'... 'இரண்டே வாரத்தில் 2 மடங்கான எண்ணிக்கை'... 'தமிழக கொரோனா நிலவரம்'...
முகப்பு > செய்திகள் > தமிழகம் தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக 3 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.
தமிழகத்தில் தொடக்கத்தில் சென்னை மற்றும் சென்னையை ஒட்டிய மாவட்டங்களில் மட்டுமே அதிக அளவில் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வந்த நிலையில் ஜுலை மாதம் முதல் தமிழகத்தின் பிற பகுதிகளிலும் நோய்ப்பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது. தற்போது மாநிலம் முழுவதும் நாளொன்றுக்கு சராசரியாக 6,000 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வரும் நிலையில், ஆகஸ்ட் மாதத்தில் கோவை, கடலூர், சேலம் ஆகிய 3 மாவட்டங்களில் பாதிப்பு அதிகமாகி வருகிறது.
தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கையில், இந்த 3 மாவட்டங்களில் மட்டும் 16 சதவிகிதத்தினர் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. கோவையில் ஆகஸ்ட் 10ஆம் தேதி 1,561 பேர் சிகிச்சையில் இருந்த நிலையில் 24ஆம் தேதி அந்த எண்ணிக்கை 3143 ஆக அதிகரித்துள்ளது. இரண்டே வாரத்தில் கோவையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 2 மடங்கு உயர்ந்துள்ளது. கடலூரில் ஆகஸ்ட் 1ஆம் தேதி 1195 ஆக இருந்த சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை, தற்போது 3,228 ஆக அதிகரித்திருக்கிறது. அதேபோல சேலத்தில் ஆகஸ்ட் 10ஆம் தேதி சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 1123 ஆக இருந்தநிலையில், தற்போது 2,536 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் ஜுன் மாத தொடக்கத்தில் உச்சத்தில் இருந்த இருந்த கொரோனா தாக்கம், ஜுலை மாதம் முதல் குறையத் தொடங்கியது. இந்நிலையில், தற்போது மீண்டும் சென்னையில் நோய்ப்பரவல் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கி இருப்பது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் நோய்ப்பரவல் வேகமும், சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கையும் ஜுலையுடன் ஒப்பிடுகையில் ஆகஸ்ட் மாதத்தில் சற்று குறைந்துள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்கு இடையிலும்'... 'அதிரடி நடவடிக்கைகளால்'... 'குறைந்த வேலை வாய்ப்பின்மை விகிதம்!'...
- 'தமிழகத்தில் இன்றைய கொரோனா அப்டேட்...' 'சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில்...' - இன்னும் கூடுதல் தகவல்கள்...!
- Oxford பல்கலைக்கழகத்தின் தடுப்பு மருந்து தமிழகம் வருகிறது!.. 'இது' தான் ப்ளான்!.. தயார் நிலையில் மருத்துவர்கள்!
- 'இப்படியே போச்சுனா எத்தனை பேர் 'ரோட்டு'க்கு வருவாங்க தெரியுமா!? கொடிகட்டி பறந்தவங்களுக்கே இந்த நிலையா'?.. மோசமான நெருக்கடியில் நிறுவனங்கள்!.. 'பகீர்' தகவல்!
- “ஒழிஞ்சுதுனு நம்பி பள்ளிகள திறந்தோம்!”.. “அம்புட்டுதேன்.. இப்ப வெச்சு செய்யுது”.. - 'புலி வால புடிச்ச கதையா' திண்டாடி வரும் நாடு!
- 'சென்னையில் நாளை (26-08-2020)'... 'எங்கெல்லாம் பவர்கட்?'... 'ஏரியா விவரங்கள் உள்ளே'...
- 'உலகிலேயே முதல்முதலாக இப்படி ஆகியிருக்கு'... ' 4 மாதங்களுக்கு பின் அதிர்ச்சி கொடுத்த கொரோனா'... 'ஆய்வாளர்கள் விடுத்துள்ள முக்கிய எச்சரிக்கை!'...
- ‘தடையை மீறி மது.. பார்ட்டி..நடனம்!’.. கொத்தாக பிடிக்க போன போலீஸ்.. 12 பெண்கள் உட்பட அடுத்தடுத்து உயிரிழந்த 13 பேர் !
- 'தடுப்பூசி விஷயத்தில்'... 'துணிச்சலாக புது ரூட்டை கையிலெடுத்த சீனா'... 'பாதிப்பு குறைய இதுதான் காரணமா?'... 'சந்தேகத்தை கிளப்பும் நாடுகள்'...
- "150 நாட்களுக்கும் மேல் திறக்கப்படாத தியேட்டர்கள்".. ஆனாலும் நடந்த ஆச்சர்யம்..! கெத்து காட்டிய ‘மல்டிப்ளக்ஸ்’ தியேட்டர்கள்!