"அடுத்த 28 நாட்கள்... இதுல ரொம்பவே கவனமா இருக்கணும்!!!"... 'முக்கிய தகவலுடன் சுகாதாரத்துறை செயலாளர் எச்சரிக்கை!'...
முகப்பு > செய்திகள் > தமிழகம்அடுத்த 14 முதல் 28 நாட்கள் மிகவும் முக்கியமானது என அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் சுகாதாரத்துறை செயலாளர் அறிவுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து கொண்டே வரும் நிலையில், கடந்த சில நாட்களாக சராசரியாக பாதித்தோர் எண்ணிக்கை 2 ஆயிரத்துக்கு குறைவாகவே இருந்து வருகிறது. இந்நிலையில் தற்போது தீபாவளி பண்டிகை விடுமுறை முடிந்து பிற மாவட்டங்களிலிருந்து ஊர் திரும்புவர்களால் பாதிப்பு அதிகரித்துள்ளது. இதனால் தமிழகத்தில் மேலும் பாதிப்பு அதிகரிக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டி சுகாதாரத்துறை தீவிர நடவடிக்கை எடுத்துவருகிறது. இதையடுத்து அடுத்து வரும் 14 முதல் 28 நாட்கள் மிகவும் முக்கியமானது எனவும், இந்த காலங்களில் கொரோனா பரிசோதனையை தொடர்ந்து அதிகரிக்க வேண்டும் எனவும் அனைத்து மாவட்ட கலெக்டர் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனருக்கும் சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் அனுப்பியுள்ள செய்தியில், "தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து கொண்டு வருகிறது. தற்போது பண்டிகை காலம், மழை மற்றும் விடுமுறைகளால் கொரோனா பரிசோதனை செய்பவர்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. நாளுக்கு நாள் காய்ச்சல் முகாம்களில் பரிசோதனை செய்பவர்களின் எண்ணிக்கையும் குறைந்து கொண்டே இருக்கிறது. வரும் நாட்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பொதுமக்கள் அனைவரும் முக கவசம் அணிதல், நிலையான வழிகாட்டு முறைகளை பின்பற்றுதல் ஆகியவற்றை முழுமையாக கடைபிடிப்பதை உறுதி செய்ய வேண்டும்.
கட்டுமான பகுதிகள், நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்கள், பணிபுரியும் இடங்களை தொடர்ந்து கண்காணித்து நோய் தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். கடந்த இரு நாட்களாக தஞ்சாவூரில் ஒரு கட்டுமான பகுதியிலும், சென்னை தண்டையார்பேட்டையில் பீகாரில் இருந்து வந்தவர்களிடமும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதனால் கொரோனா பரிசோதனை மற்றும் காய்ச்சல் முகாம்களின் எண்ணிக்கையை எந்த சூழ்நிலையிலும் குறைக்க கூடாது.
படுக்கை மற்றும் ஆக்ஸிஜன் படுக்கைகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். பல மாநிலங்கள் 'ஆன்டிஜென்' பரிசோதனை மட்டும் செய்வதால், வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். பண்டிகை காலங்களுக்கு முன்னர் இருந்த அளவுக்கு பரிசோதனை மேற்கொள்ளாவிடில், பல கொரோனா பாதிப்புகள் கண்டறியப்படாமல் போய்விடும். எனவே இனிவரும் 14 முதல் 28 நாட்களும் மிகவும் முக்கியமானது. பண்டிகை காலங்களுக்கு முன்னர் இருந்ததுபோன்று தற்போது கொரோனா பரிசோதனையை அதிகரிக்க வேண்டும்" எனக் கூறியுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘ஒரே ஒரு தேக்கரண்டி தான்!’.. “உலகம் முழுக்க 54 மில்லியன் மக்களின் பாதிப்புக்கு இதுதான் காரணம்!” - அதிரவைத்த கணித மேதை.
- 'தமிழகத்தின் இன்றைய (17-11-2020) கொரோனா அப்டேட்...' சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில்...' - முழு விவரங்கள் உள்ளே...!
- கொரோனாவை விட பெரிய ‘அச்சுறுத்தல்’ இதுதான்.. இதுக்கு ‘தடுப்பூசி’ எல்லாம் கிடையாது.. செஞ்சிலுவைச் சங்கம் எச்சரிக்கை..!
- 'குறைகிறதா அமெரிக்க மோகம்?'... 'வரலாறு காணாத வீழ்ச்சி'... இதுதான் காரணமா?
- 'சிகிச்சையில் இருந்த அனைவரும் டிஸ்சார்ஜ்'... 'புதிய பாதிப்புகள் ஜீரோ'... 'தமிழகத்தில் கொரோனா இல்லாத 'முதல்' மாவட்டம்!!!'...
- ‘தடுப்பூசி மட்டுமே போதாது’... ‘இதையும் சேர்த்து செய்தால் தான்’... ‘கொரோனாவை கட்டுப்படுத்த முடியும்’... ‘உலக சுகாதார அமைப்பு கருத்து’...!!!
- முடிவுக்கு வருகிறதா கொரோனாவின் கொடுங்காலம்?.. 'மாபெரும் வெற்றி' என அறிவிப்பு!.. முண்டியடித்துக் கொள்ளும் உலக நாடுகள்!.. அடுத்தது என்ன?
- 'தீபாவளிக்கு மட்டும் இத்தன கோடி விற்பனையா?!!'... 'ஆனா அங்கதான் டிவிஸ்ட்டே!!!'... 'சீனாவுக்கு பெரிய ஷாக்காக கொடுத்த இந்திய மக்கள்!'...
- தமிழகத்தில் மேலும் 17 பேர் கொரோனாவுக்கு பலி!.. தற்போது எத்தனை பேர் சிகிக்சை பெறுகிறார்கள்?.. சென்னையின் நிலை என்ன?.. முழு விவரம் உள்ளே
- '12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு'... 'மேலும் இந்த 4 மாவட்டங்களில்'... 'சென்னை வானிலை ஆய்வு மையத்தின் புதிய அறிவிப்பு!!!'...