VIDEO: 'நடிகர் விஜய் காங்கிரஸ் கட்சிக்கு வந்தால்!'... தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி பரபரப்பு பேட்டி!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

நடிகர் விஜய் காங்கிரஸ் கட்சிக்கு வந்தால் மனதார வரவேற்போம் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

VIDEO: 'நடிகர் விஜய் காங்கிரஸ் கட்சிக்கு வந்தால்!'... தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி பரபரப்பு பேட்டி!

பிகில் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில், நடிகர் விஜய்யின் பேச்சு தமிழக அரசியலில் பல்வேறு விவாதங்களைக் கிளப்பியது. அப்போது, விஜய்க்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஆதரவு தெரிவித்திருந்தது.

மேலும், நடிகர் விஜய் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடந்த போதும், விஜய்க்கு ஆதரவாக கே.எஸ்.அழகிரி பேசியிருந்தார். தொடர்ச்சியாக காங்கிரஸ் கட்சி விஜய்க்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வரும் நிலையில், காங்கிரஸ் கட்சியில் இணைய நடிகர் விஜய்க்கு அழைப்பு விடுக்கப்படுமா என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரியிடம் கேட்டபோது, "ரஜினிக்கு சலுகை வழங்கியதை போல், விஜய்க்கு 24 மணி நேர அவகாசம் கூட வருமான வரித்துறை வழங்காதது ஏன்? விஜய் காங்கிரஸ் கட்சிக்கு வந்தால் மனதார ஏற்றுக்கொள்வோம். ஆனால், காங்கிரஸ் கட்சிக்கு வர வேண்டும் என அழைக்கவில்லை" என்று கூறியுள்ளார்.

Video Credit: News 7 Tamil

CONGRESS, VIJAY, KSAZHAGIRI

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்